”என்கிட்ட பேச மாட்டியா?” மண்ணெண்ணெய்யை கையில் எடுத்த கொடூரன்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
பேச மறுத்த சிறுமியை வாலிபர்கள் இருவர் மண்ணெண்ணெய்யை வைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயப்புரம் அருகே பேச மறுத்த சிறுமியை வாலிபர் மண்ணெண்ணெய் வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
17 வயது சிறுமி:
தூத்துக்குடி மாவட்டம், பரமக்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர், இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு காதலாக மாறியது, இவர்களின் காதல் சிறுமியின் வீட்டுக்கு தெரிய வந்தவுடன் சிறுமி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாட்டின் வீட்டிற்கு அனுப்பி வைப்பு:
இருவரும் நண்பர்களாக இருப்போம் எனக்கூறிப் பிரிந்துவிட்ட நிலையில், வாலிபர் சந்தோஷ் சிறுமிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது, வாலிபர் சந்தோஷ்சால் மகளுக்கு பிரச்னை வரும் என்று நினைத்த சிறுமியின் தாய் காளியம்மாள், தனது மகளை எட்டயபுரத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பாட்டி வீட்டில் இருந்த சிறுமி கடந்த 23ஆம் தேதி வீட்டின் அருகே பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மீட்கப்பட்டார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பேச மறுத்ததால் தீ வைப்பு:
சிறுமி அளித்த வாக்குமூலத்தில் முன்னாள் காதலன் சந்தோஷ் அவரிடம் பேச கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. சிறுமி வர மறுக்கவே சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தன் மீது தீ வைத்ததாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பேச மறுத்த சிறுமியை வாலிபர்கள் இருவர் மண்ணெண்ணெய்யை வைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

