மேலும் அறிய

தூத்துக்குடியில் 10 பில்லியன் டாலர் முதலீடு! லத்தீன் அமெரிக்கா ரகசிய திட்டம்?

லத்தீன் அமெரிக்கா பெரிய அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. இதன் மூலம் அந்த மாவட்ட மக்களுக்கு பெருமளவிலான வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரிய அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தூத்துக்குடியில் 10 பில்லியன் டாலர் முதலீடு! லத்தீன் அமெரிக்கா ரகசிய திட்டம்?

இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களை சேர்ந்த நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சென்னையில் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளின் வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நடத்தப்பட்டது. அப்போது இந்திய லத்தின் அமெரிக்க வர்த்தக கூட்டமைப்புக்கான தலைவராக இருக்கும் ராஜ்குமார் ஷர்மா செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள் லத்தீன் அமெரிக்க நாடுகள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளனர் என்ற தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டு இருக்கிறார் . எந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய இருக்கின்றன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. தேசிய பாதுகாப்பு கருதி இந்த விவரங்களை என்னால் வெளியிட முடியாது என பேட்டியில் குறிப்பிட்டு இருக்கும் ராஜ்குமார் ஷர்மா பாதுகாப்பு துறை சார்ந்த முதலீடாக இது இருக்கும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் என்பது 2000ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலராக தான் இருந்தது அது தற்போது 18 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை லித்தியம் மற்றும் அரிய வகை பொருட்களை இறக்குமதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துகிறது.

தூத்துக்குடியில் 10 பில்லியன் டாலர் முதலீடு! லத்தீன் அமெரிக்கா ரகசிய திட்டம்?

தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய துறைமுகம் சார்ந்த நகரங்களில் எல்லாம் இது சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய பிரிவுகளின் தென்னிந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவதாக ராஜ்குமார் ஷர்மா தெரிவிக்கிறார். ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் லத்தின் அமெரிக்க நாடுகளிடமிருந்து 40 மில்லியன் டாலர்கள் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன எனக் கூறியிருக்கும் அவர், இதில் பெருமளவிலான முதலீடு தமிழ்நாட்டை நோக்கி தான் வந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்தியா லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் கியூபா, சிலி, வெனிசுலா, அர்ஜென்டினா, எல் சால்வடார் நாடுகளை சேர்ந்த தொழில்துறை தலைவர்களும் ,தூதரக அதிகாரிகளும், தொழில் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget