மேலும் அறிய

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்கள், கோரிக்கைகளை கேட்டறிகின்றனர். அதன்படி இக்குழுவினர் முதல் சுற்றுப்பயணத்தை தூத்துக்குடியில் துவங்கினர்.

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இதில் தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், பெண்கள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அளித்தனர்.திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாளை கன்னியாகுமரியிலும், பிப்.7 ஆம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சையிலும், 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும், 11-ம் தேதி திருப்பூரிலும், 21, 22, 23 தேதிகளில் சென்னையிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறுகையில், "வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர், தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு நியமித்து உள்ளார். அந்த குழு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் தேர்தல் அறிக்கை குழு முதன் முதலாக பணிகளை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் துறையினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

ராமநாதபுரத்தில் இருந்து மீனவர்கள், தென்னை விவசாயிகள், மிளகாய் விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். விருதுநகரில் இருந்து பட்டாசு தொழிலில் உள்ளவர்கள், தூத்துக்குடி உப்பு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த கருத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் முதல்-அமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கையோடும், மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றும், மத்திய அரசு நல்ல அரசாக, மக்களை மதிக்க கூடிய அரசாக, மாநில உரிமைகளின் மீது நம்பிக்கை இருக்க கூடிய அரசாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

மக்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக ஜி.எஸ்.டி.யில் பல குழப்பங்கள் உள்ளன. மாநில உரிமைகளை மதிப்பதும் இல்லை. தூத்துக்குடி, சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு கூட மத்திய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மக்கள், மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியோடுதான் எங்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். பெரும்பாலும் தூத்துக்குடியை தொழில் மாவட்டமாக மாற்றுவதற்கு ரெயில், விமான நிலையம் விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம் போன்றவை முக்கியமான கோரிக்கையாக உள்ளது. மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும். அதன்படி முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget