மேலும் அறிய

வாட்சப் குழு மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் - அரசு நிதிஒதுக்காததால் சொந்த செலவில் தார் சாலை அமைக்கும் கிராமம்

முதற்கட்டமாக 650 மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் மொத்தமுள்ள 3 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து தர அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குமட்டித்திடல் ஊராட்சி புத்தகரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒருசிலர் ஒன்றிணைந்து எல்லோரையும் போல கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் வழக்கம் போல் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புத்தகரம் கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரின் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். இதனை அறிந்த வாட்ஸ்அப் குழு நண்பர்கள் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்தனர். வாட்ஸ்அப் குழுவில் இருந்த புத்தகரம் கிராம இளைஞர்கள், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் தங்களால் முடிந்த பணத்தை சிறுவனின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சிறுவன் படிப்படியாக குணமடைந்து தற்போது நல்ல நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் அளவிற்கு குணமடைந்துள்ளார். 

வாட்சப் குழு மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் - அரசு நிதிஒதுக்காததால் சொந்த செலவில் தார் சாலை அமைக்கும் கிராமம்
 
நண்பர்கள் முயற்சியால் ஒரு ஏழை சிறுவனின் நோய் குணமடைய இவர்கள் செய்த உதவி இவர்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது. இதனால் ஊக்கம் பெற்ற இளைஞர்கள் கடந்த பல ஆண்டுகளாக புத்தகரம் வடக்கு தெரு பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் தார் சாலை சீராமைக்கபடாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து. இதனால் இப்பகுதிக்கு பள்ளி கல்லூரி வாகனங்கள் வருவதில்லை. பள்ளி செல்லும் பிள்ளைகளும், கற்பினி பெண்களும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை செப்பனிட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சாலை சீரமைப்பு பணிகளை அரசுதான் சீரமைக்க வேண்டும் என ஒதுங்கிவிடாமல் நம் கிராமத்தை நாம் தான் சீர் செய்ய வேண்டும் என நினைத்து முதற்கட்டமாக  650 மீட்டர் தூரத்திற்கு ஜே.சி.பி மற்றும் ரோட் ரோலர் உதவியுடன் குண்டும் குழியுமான பழைய சாலை அகற்றப்பட்டு கற்கள் செம்மண் கொண்டு தற்போது சாலை செப்பணிடபட்டு வருகிறது. அதன் படி புத்தகரம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இளைஞர்கள் சிறுக சிறுக சேமித்து அனுப்பிய பணத்தை கொண்டு சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கினர். கிராமத்து இளைஞர்களின் முயற்சியை கவனித்த அப்பகுதி பெண்கள் தாங்களும் இளைஞர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம் என கூறி சம்பளம் இன்றி சாலை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். 

வாட்சப் குழு மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் - அரசு நிதிஒதுக்காததால் சொந்த செலவில் தார் சாலை அமைக்கும் கிராமம்
 
இளைஞர்களின் இந்த பெரும் முயற்சிக்கு இப்பகுதி ஊராட்சிமன்ற தலைவரும் தந்த ஒத்துழைப்பால் தற்போது இந்த புதிய சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இப்பகுதி இளைஞர்கள் கிராம மக்கள் கொடுத்த தொகையை கொண்டு 650 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே சாலை அமைப்பதற்கான வேலைகளை செய்ய முடியும் என்றும்  3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க தமிழக அரசு தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது புத்தகரம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டு கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மழைகாலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் சென்று வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். எனவே புத்தகரம் வடக்கு தெரு சாலையை 3 கிலோ மீட்டர் தூரம் வரை முழுமையாக சீரமைத்து சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர்கள் அரசு உதவிசெய்யும் வரை தங்களால் முடிந்த பணத்தை சேமித்து எங்கள் பகுதியின் தேவைகளை நாங்களே நிறைவேற்றிக் கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget