மேலும் அறிய

திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

மழை வெள்ள பேரிடரால் அழிந்த நெற்பயிர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு காப்பீட்டு தொகை கிடைக்காத கிராங்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பது அரசின் பயிர் காப்பீடு திட்டம். இந்த நிலையில் ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப் பட்டதில் பல்வேறு கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில மழை வெள்ள பேரிடரால் அழிந்த நெற்பயிர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு காப்பீட்டு தொகை கிடைக்காத கிராங்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், தொடர் மழையால் அழிந்த சம்பா, தாளடி மற்றும் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் அழிந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மழை பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.


திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தற்பொழுது பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் விவசாயிகளுக்கு 6000 மதிப்பிலான இடுபொருள்கள் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. ஆகையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் காவல் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாங்கினர்.  விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில்  விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நைஜிரியாவில் இருந்து சென்னை வந்த நபருக்கு குடும்பத்தினருடன் ஒமிக்ரான் பரிசோதனை - மா.சுப்பிரமணியன் பேட்டி

 

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget