கும்பகோணத்தில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிளுக்கு இளந்தமிழர் பயிற்சி பட்டறை
தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை கடந்த 2013 ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 38 மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை நிறைவு விழா நடந்தது.
தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை கடந்த 2013 ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன்படி கும்பகோணம், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை ந.அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

கடந்த ஒரு வாரமாக தினமும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப, தமிழோடு உறவாடுவோம், சங்க இலக்கியம்-கவிதையும் காட்சியும், சங்க இலக்கிய நயம், நாடகம் எனும் கலை வடிவம், புறநானூறு கூறும் செய்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சம்பந்தபட்ட தலைப்புகளில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், அறிவியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் என 42 பேச்சாளர்கள் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினர்.
இந்த பயிற்சியில் தமிழகத்தில் 38 மாவட்டகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மேலும் தங்களை மெருகேற்றிக் கொண்டனர். இந்த பயிற்சி பட்டறையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சத்தியபிரியா தலைமை வகித்தார்.
இந்த பயிற்சியின் போது பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவி மணி மொழி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதிஅரசு கலைக்கல்லூரி மாணவர் முனிய பிள்ளை விருதுநகர் மாவட்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி கனகலெட்சுமி ஆகிய 3 பேர் முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் தொகையும், சான்றிதழும் பெற்றனர். திருச்சி உருமு தனலெட்சுமிகல்லூரி மாணவன் பாலகணபதி, கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவன் ஸ்ரீபநாதன், திருவாரூர் ராபியம்மாள் அமகது மொய்தீன் கல்லூரி மாணவி நறுமுகை ஆகிய 3 பேர் 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். தூத்துக்குடி மாவட்டம் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஞானவேல், தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி சீதா, திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி(தன்னாட்சி)மாணவன் ராஜவேல் ஆகிய 3 பேர் 3- ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மா, அன்னை கல்வி குழும தலைவர் முனைவர் அன்வர் கபீர், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, துணை முதல்வர் லயோலா பெரிஸ், அன்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகா, தமிழ்வளர்ச்சி துறை அதிகாரி தானேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் இளஞ்செழியன், ரமேஷ்பாபு, செந்தில்குமார், செந்தில், ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.





















