மேலும் அறிய

இந்த வருடமாவது இனிக்குமா? கரும்பு விலை குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு: தோகை உரிக்கும் பணிகள் மும்முரம்

மழை தொடரவில்லை என்பதால் கரும்பு பயிர்கள் நன்கு வளர உதவியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்கி விடும் என்பதால் கரும்பு விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்: இந்த வருடமாவது இனிக்குமா? என்று கரும்பு சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளில் தோகை உறித்தல் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை, வாளமரக்கோட்டை வளப்பக்குடி, மன்னார்சமுத்திரம், கூடநாணல், திருக்காட்டுப்பள்ளி, அடஞ்சூர், மடிகை, ஒரத்தநாடு, பாபநாசம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போது கரும்பில் தோகை உரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பொங்கல் கரும்பை பொறுத்த வரையில் சாகுபடி செய்ய 10 மாத காலம் வரை ஆகும். சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் ஜனவரி மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால் முதல் 3 உழவிற்கு பின்னர் சமன் செய்யும் கருவியை கொண்டு நிலத்தை சீரமைத்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களை அமைக்க வேண்டும்.


இந்த வருடமாவது இனிக்குமா? கரும்பு விலை குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு: தோகை உரிக்கும் பணிகள் மும்முரம்

நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும். 6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதை பருக்களை சேகரிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் காற்று புகாத வகையில் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.

முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.

வெட்டுவதற்கு முன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 தோகைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10  தோகைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன.

மற்றவை சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த தோகைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாதவற்றை உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணின் ஈரம் காக்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் கரும்பு சீராக அதே நேரத்தில அதிக வாளிப்புடன் வளரும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை கரும்பு பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும். மழை தொடரவில்லை என்பதால் கரும்பு பயிர்கள் நன்கு வளர உதவியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்கி விடும் என்பதால் கரும்பு விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதை எடுத்து தஞ்சையை அடுத்து உள்ள சூரக்கோட்டை பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தோகை உரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தோகை உரிப்பது கரும்பின் அடிப்பகுதியை காற்றோட்டமாக வைத்து, பூச்சி தாக்குதல் மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது, இதனால் கரும்பின் தரம் மற்றும் சுவை அதிகரிக்கிறது.

மிகவும் சிரமப்பட்டு சாகுபடி செய்துள்ள பொங்கல் கரும்புகள் விலை நல்லபடியாக அமைந்து இந்தாண்டு விவசாயிகள் மனதை இனிக்க செய்ய வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget