மேலும் அறிய

சந்தைக்கு வந்து விட்டு திரும்பியபோது விபரீதம்: வாலிபர், மாணவர் பலி: பேராவூரணியில் சோகம்

சாலையைக் கடக்க முயன்ற போது மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிவராமன் மற்றும் அறிவுக்கரசு இருவரும் சிக்கினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே இன்று மாலை நடந்த சாலை விபத்தில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் சிவராமனின் உறவினர். இந்நிலையில் இன்று மாலை ராஜசேகரனின் மகன் ஆயங்குடி அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவரான அறிவுக்கரசை (11) பேராவூரணி சந்தைக்கு தனது பைக்கில் சிவராமன் அழைத்து சென்றார்.

சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு, மீண்டும் பைக்கில் தங்களின் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் சாலையைக் கடக்க முயன்ற போது மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிவராமன் மற்றும் அறிவுக்கரசு இருவரும் சிக்கினர். இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த இருவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பார்த்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பேராவூரணி போலீசார் தூத்துக்குடியில் இருந்து ஏற்றி வந்த உர மூட்டைகளை பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு, காலி லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழசிறுபூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா என்பவர் மகன் லாரி டிரைவரி; சதீஷ் கண்ணன் (23) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget