மேலும் அறிய

தஞ்சாவூர் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்

செல்லப்பன்பேட்டையில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவன், மனைவி கார் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே வல்லம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பி.மகாலிங்கம் (67). விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (62). இவர்கள் இருவரும் தங்கள் ஸ்கூட்டியில் நேற்று காலை செல்லப்பன்பேட்டையில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

வல்லம் பிரிவு சாலையில் திரும்பும் போது பின்னால் கேரளாவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் மகாலிங்கம் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாலட்சுமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மகாலிங்கம் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மகாலிங்கம் இறந்தார். இதையடுத்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ச.அர்ஜூன் (23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

தஞ்சாவூர் மேரீஸ் கார்னரில் பேருந்துக்காக பயணிகள் நிழற்குடையில் காத்திருந்த போது, நகர பேருந்து மோதியதில் மூவர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்துக்கு அரசு நகர பேருந்து வந்தது. இந்த பேருந்து மேரீஸ் கார்னர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக சென்றது. அப்போது பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்துக்காக காத்திருந்த மூவர் மீது பேருந்து மோதியது.

இதில் கீழவாசலைச் சேர்ந்த துரைராஜ் (54), அவரது மகன் அபிஷேக் (17) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சோனாலி(23) ஆகிய மூவரும் காயமடைந்தனர். இதில் துரைராஜின் இரு சக்கர வாகனம் பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்டு சேதமடைந்தது. மேலும் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த போக்குவரத்து போலீஸாரின் நிழற்குடையும் சேதமானது. 

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்விபத்து குறித்து தஞ்சாவூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget