மேலும் அறிய
Advertisement
திருவாரூர் விவசாயிகளிடம் அதிகவிலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள்...!
’’அதிகபட்சமாக ஒரு கிலோ பருத்தி விலை 87 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இதுவரை 45 ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’’
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முதன்மையான சாகுபடியாகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாகுபடி அளவின் பரப்பு படிப்படியாக குறைந்து வந்து தற்போதைய நிலையில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்ய கூடிய பருத்தி சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினர். குறிப்பாக பண பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் சரசு கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 5500 ரூபாய்க்கு இந்திய பருத்தி கழகம் சார்பில் கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது குறிப்பாக திருவாரூர், மூங்கில்குடி ,குடவாசல், வலங்கைமான், ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பருத்தி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்திய பருத்தி கழகம் பருத்தி மறைமுக ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக தேனி, திருப்பூர், கும்பகோணம், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 17 வாரங்கள் மறைமுக பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகபட்சமாக இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8,550 ரூபாய்க்கு விலை போயுள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 45 ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது வேளாண்மைக்கு என்று அறிவித்த தனி பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மட்டுமல்லாமல் துணை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலமாக விவசாயிகள் தங்களது பருத்தியை எளிதில் விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக அமைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் அரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி உற்பத்தி செய்து நாங்கள் தனியார் நபர்களிடம் விற்பனை செய்து வருவதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ பருத்தி 87 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம். இதுவரை இவ்வளவு விலைக்கு நாங்கள் விற்பனை செய்ததில்லை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதேபோன்று ஆண்டுக்காண்டு பருத்தியை அதிக விலைக்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிராமப்புறங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion