மேலும் அறிய

ஜில்லுன்னு மாறியது தஞ்சை... எதனால் என்று தெரியுங்களா?

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் கடந்த ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 வந்து நாளாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜில்லுன்னு மாறியது தஞ்சை... எதனால் என்று தெரியுங்களா?

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மத்திய அரசின் நெல் சேமிப்பு கிடங்கிற்கு இடமாற்றம் செய்யும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.

ஒரு சில பகுதியில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனுப்பப்படாமல் உள்ளது. இருப்பினும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேபோல் இன்று விடியற்காலையில் வல்லம், ஆலக்குடி 8நம்பர் கரம்பை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. 

இந்நிலையில் காலை 10 மணிக்கு மேல் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, தென்னம நாடு, உறந்தைராயன் குடிகாடு உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தின் சில பகுதியில் சம்பா அறுவடைப்பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மழையை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வயலை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் இன்னும் அறுவடை மேற்கொள்ளாமல் உள்ள விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget