மேலும் அறிய
Advertisement
திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். பணிகள் பாதிப்பால் பொதுமக்கள் அவதி.
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள 412 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு வருடமாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவியிறக்கம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டவாறு பதவியிறக்கத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும், வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த 16.08.22 அன்று வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் உடனடியாக வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மனித சங்கிலி தொடர் வேலை நிறுத்த போராட்டம் போன்றவற்றில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion