மேலும் அறிய

திருவாரூர் அரசு அருங்காட்சியகம்.... போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அமைக்க கோரிக்கை..!

அருங்காட்சியம் என்பது அந்தந்த மாவட்டத்தின் பழம் பெரும் பொருட்கள், கண்டெக்கப்படும் சிலைகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் அமையும்.

திருவாரூர் அரசு அருங்காட்சியகம் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருங்காட்சியகம் என்பது அரும்பொருட்களை சேகரித்து, அவற்றை காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்கான உள்ள கட்டிடத்தை குறிக்கும். கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கை பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்படும் அரும்பொருட்களை ஆய்வு நடத்திடவும், நமது வாழ்வியல் சுழலை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவோருக்கு பொழுதுபோக்கு மற்றும் அறிவூட்டும் இடங்களாகவும் உள்ளன. திருவாரூர் அருங்காட்சியகம் கடந்த 1998 ஆண்டு திறக்கப்பட்டது. அன்றைய நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் இடம் அளிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் பாதி இடம் கோவில் அலுவலக பயன்பாட்டில் உள்ளது. சுமார் 2500 சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியம் இயங்கி வருகின்றது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய நாரினாலா பொருட்கள், உள்நாட்டு, இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், மலேசியா நாணயங்கள், வாத்திய கருவிகள், வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் அரசு அருங்காட்சியகம்.... போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அமைக்க கோரிக்கை..!

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்ணிற்குள் இருந்து கிடைக்கும் புராதான பொருட்கள், சாமி சிலைகள், படிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் குடவாசல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மிகவும் அழுகுடன் வடிவமைக்கப்பட்ட நடராஜர் பார்ப்போரை வியக்க வைக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள பஞ்சமுக வாத்தியம் சோழர் காலத்தில் பல்வேறு திருக்கோவில்களில் இசைக்கப்பட்ட கருவியாகும். தற்போதும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது. கி.மு. 2 நூற்றாண்டில் தமிழர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அதற்குள் வைத்து பூமியில் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த தாழியை முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. இந்த தாழி வலங்கைமான் ஆவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அஸ்வாதிரம் தோண்டும்போது கிடைத்துள்ளது. இதனை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதுமக்கள் தாழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிராமாண்டமாக உள்ள முதுமக்கள் தாழியை அனைவரையும் வியக்க வைக்கிறது.

திருவாரூர் அரசு அருங்காட்சியகம்.... போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அமைக்க கோரிக்கை..!

கடந்த 2012 ஆண்டு  திருவாரூர் அருகே கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் பள்ளம் தொண்டியபோது புத்தர் கற்சிலை கிடைத்துள்ளது. இந்த கற்சிலை சுமார் 5 அடி உயரமும், ஒரு டன் எடையும் கொண்டது. இதனை அருகாட்சியத்திற்குள் வைக்க போதிய இடவசதியின்றி அருங்காட்சியகம் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடாரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் மற்றும் உயிரினங்கள், கற்கருவிகள், தோல் பொருட்கள் ஆகியவை தனித்தனி கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருகாட்சியத்தில் மேலும் பல்வேறு அரும்பொருட்கள் காட்சிப்படுத்த போதிய இடவசதியின்றி உள்ளது. பாதுகாப்பு தண்மையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட அரிதான சாமி சிலைகள், உலோகம், ஜம்பொன் போன்ற சிலைகள் உடனியாக சென்னையில் உள்ள தலைமை அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 300-க்கம் மேற்ப்பட்ட கண்டெடுக்கப்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் என்பது அந்தந்த மாவட்டத்தின் பழம் பெரும் பொருட்கள், கண்டெக்கப்படும் சிலைகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் அமையும். ஆனால் இதற்கான போதிய இடவசதி இல்லாத வகையில் திருவாரூர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழம் பெருமைகள், கண்டெக்கும் சிலைகள் என அனைத்தும் இடம் பெற்றிடும் வகையில் பொது இடத்தில் போதிய இடவசதியான கட்டிடத்தில் அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget