மேலும் அறிய

திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெல் பயிர்கள் - விவசாயிகள் கவலை

விவசாயிகளின் நெல் பயிர் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன. 

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும், பருவமழை பொய்த்துப் போனதன் காரணத்தினாலும் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளை திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 30 சதவிகிதம் போர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் வருடம் தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். 

திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெல் பயிர்கள் - விவசாயிகள் கவலை

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்தது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெருப்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. 

குறிப்பாக நன்னிலம் முடிகொண்டான் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வலங்கைமான் கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கின்ற அவல நிலையும் சில இடங்களில் காணப்படுகிறது. சென்ற வருடமும் இந்த வருடமும் குளிவை நெற்பயிர் சாகுபடிக்கு பயிர் காப்பீடு என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்த குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டை விவசாயிகள் பெறுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் நெல் பயிர்கள் அறுவடை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக அனைத்து நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. குறுவை சாகுபடிக்காக செலவு செய்த தொகையை கூட விவசாயிகள் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிப்புக்கு தகுந்தாற் போல் குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். மேலும் வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாயிகளின் நெல் பயிர் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AFG vs SA: அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AFG vs SA: அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
IND vs ENG : இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
Embed widget