மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் வீணாகி வாய்க்காலில் செல்லும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கோரிக்கை
பொது மக்கள் பயன்பாட்டிற்காக செல்லும் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பகுதி மக்கள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரி கிராமத்திலிருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் உள்ள வால்வு பகுதி உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்கிறது.
நாகை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு பல வருடங்களாக குடிதண்ணீர் திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரி ஊராட்சியில் இருந்து கூத்தனூர் நீரேற்றும் நிலையம் வழியாக கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு குழாய் மூலம் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்படு கிறது.
நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆழியூர் பிரிவு சாலை வளைவில் சங்கமங்கலம் வாய்க்கால் செல்கிறது. சில மாதங்களாக அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட வால்வு பகுதி உடைந்து சங்கமங்கலம் வாய்க்காலில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்கிறது. பிரதான சாலை வழியாக பல அரசு அதிகாரிகள் செல்கின்றனர். ஆனால் எந்த அதிகாரியும் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கின்றனர். பொது மக்கள் பயன்பாட்டிற்காக செல்லும் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion