மேலும் அறிய

திருவாரூரில் கொட்டும் மழையில் நாத்து நடவு செய்த பெண் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண் விவசாய தொழிலாளர்கள்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் தலையில் தாள் பைகளை அணிந்து கொண்டு நாத்து நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 99 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். 

திருவாரூரில் கொட்டும் மழையில் நாத்து நடவு  செய்த பெண் விவசாயிகள்

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து ஆறு நாட்களாக கன மழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர் தெளித்து 20 நாட்களே ஆன பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்து வரும் நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மலையை பொருட்படுத்தாமல் விவசாய பணிகள் பாதிக்காத வகையில் விவசாய பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர.

திருவாரூரில் கொட்டும் மழையில் நாத்து நடவு  செய்த பெண் விவசாயிகள்

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் பகுதியில் சம்பா பயிரிடப்பட்ட வயில்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் தலையில் தாள் பைகளை அணிந்து கொண்டு நாத்து நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த மழை பெய்தால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் பாதிக்கக்கூடும் என்ற வேதனையுடன் பெண் விவசாய தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக ஆய்வு செய்து ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மழை நீரை வடிய வைத்தால் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளை முழுமையாக வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என  பெண் விவசாய தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget