மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை
உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் அழுகி செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேலூரில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 86.4 மில்லி மீட்டரும் மன்னார்குடி மற்றும் வலங்கைமான் பகுதிகளில் தலா 42.2 மில்லி மீட்டரும் குடவாசல் பகுதியில் 18.6 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 25.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நினைந்தால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கு காட்டி அரசு அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேநேரத்தில் இனிமேல் அறுவடை செய்ய உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் விளை நிலங்களிலேயே மழை நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உருவாகும். ஆகையால் தாங்கள் செய்த செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என தங்களது வேதனையை விவசாயிகள் பதிவு செய்கின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களைக் கண்டெடுத்து அரசின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion