மேலும் அறிய
Thiruvarur Mangrove Forest: முத்துப்பேட்டை அலையாத்தி காடு; படகுகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி
முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் - சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை.
![Thiruvarur Mangrove Forest: முத்துப்பேட்டை அலையாத்தி காடு; படகுகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி Thiruvarur Mangrove Forest Additional staff should be appointed additional boats operated for convenience of tourists TNN Thiruvarur Mangrove Forest: முத்துப்பேட்டை அலையாத்தி காடு; படகுகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/64c946e2d35356d548ef7008e93520a91680260067249113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுற்றுலா பயணிகள்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூராவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.
![Thiruvarur Mangrove Forest: முத்துப்பேட்டை அலையாத்தி காடு; படகுகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/48bb0a651894cfb43cbb0370dc89480c1680260174574113_original.jpg)
இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை. அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது கடும் வெயில் காணப்படுகிறது இதனால் கடும் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் விடுமுறை மற்றும் ஓய்வான நேரத்தில் அருகில் இருக்கும் இந்த அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா வர துவங்கி உள்ளனர். இதனால் படகுத்துறை களைக்கட்டிய நிலையில் வனத்துறை அலுவலகத்தில் 1998ஆண்டும் ஆண்டு வரை முன்பு வன அலுவலர், வனவர், வனக்கப்பாளர், வன காவலர் என 20க்கும் அதிகமாக அலுவலர்கள் பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது பத்து அலுவலர்கள் மட்டுமே உள்ளனர், இதில் குறிப்பாக வனத்துறை சார்பில் படகுகள் உள்ளது. இதில் இரண்டு படகுகள் பழுதாகிவிட்டது. அதனால் இரண்டு படகுகள் மட்டுமே இயங்கி வருகிறது. படகு ஓட்டுவதற்கு 2பேர் மட்டுமே உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல போதுமான படகுகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இங்குவந்து பலமணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பல சுற்றுலா பணியனிகள் நீண்டதூரம் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.
![Thiruvarur Mangrove Forest: முத்துப்பேட்டை அலையாத்தி காடு; படகுகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/97458a146070bd9dd54fef25c136f4ae1680260206825113_original.jpg)
அதனால் பழுதடைந்த படகுகளை சீரமைக்க வேண்டும் கூடுதலாக படகுகளை வனத்துறை வாங்க வேண்டும் படகுக்கு என கூடுதல் படகு ஓட்டிகள் நியமனம் செய்ய வேண்டும் அதேபோல் படகு ஏறும் இடத்தில் அலையாத்திகாட்டுக்கு உள்ளே செல்ல அனுமதியும் படகுக்கு டிக்கெட் வாங்கவும் வசதியில்லை சுமார் 5கிலோமீட்டர் இடையே உள்ள முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் இந்த அலுவலகம் இயங்குவதால் மக்களுக்கு பல்வேறு வகையில் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் படகு ஏறும் ஜாம்புவானோடை படகு துறையில் அருகேயே டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும், அதேபோல் படகில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகளை படகில் வைத்துக்கொண்டே வனத்துறையினர் சுற்றிக்காட்டி ஒரு மணிநேரத்தில் திரும்ப அழைத்து வருகின்றனர் இதனால் பல பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கவும் அதனை ரசிக்கவும், பல்வேறு தாவரங்களை அறிவும் அங்கு ஓய்வு எடுக்கவும் முடியாமல் முழு திருப்தி இல்லாமல் வந்து செல்கிறனர் அதனால் சுற்றுலா பயணிகளை காட்டில் இறக்கி விட்டு அவர்களை காட்டுக்குள் சுற்றி பார்க்கவும் ஓய்வு எடுக்கவும் ஒரு மணிநேரம் என்பதை தவிர்த்து நேரகால அவகாச நேரத்தை கூட்டி உரிய அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion