(Source: ECI/ABP News/ABP Majha)
இயற்கை வேளாண்மை செய்வது எப்படி ? - வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
’’இயற்கை வேளாண்மை செய்ய வேண்டிய அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி திருச்சி மற்றும் தஞ்சாவூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு வழங்கப்பட்டது’’
திருவாரூர் மாவட்டத்தில் திடீர் கனமழையால் 31,625 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
செயற்கை விவசாயத்தோடு ஒப்பிடுகையில், இயற்கை விவசாயம் அதிக அளவு லாபத்தை ஈட்டுகிறது. மேலும் மாணவிகள் அங்குள்ள ஆர்.கே.எம் மீன் குஞ்சு பண்ணையில் மீன் வளர்ப்பு பற்றியும் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் செயல்பாடுகள் பற்றியும் பயிற்சி பெற்றனர். மாணவிகள் அங்குள்ள விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டியின் செயல்முறை செய்து காட்டி பயன்பாடுகளை விளக்கினர். வேம்பு, நொச்சி, புங்கன், ஆடாதொடா, நுணா, எருக்கு மற்றும் கோமியம் ஆகியவற்றைக் கொண்டு மூலிகை பூச்சி விரட்டியினை தயாரித்தும் காட்டினர். இந்த பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி மற்றும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை- தஞ்சாவூர் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.