மேலும் அறிய
Advertisement
வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் 2 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
விளைநிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்று மாடுகள் ஆடுகள் உயிரிழப்பதற்கு வாய்ப்பில்லை என விசாரணையில் தகவல்
வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் மற்றும் 2 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக வழங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்கள் ஆடு,மாடு,கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று வழக்கம்போல் ஆடு மாடுகளை சாலை ஓரங்கள் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மேய்வதற்காக விட்டுள்ளனர். இந்த நிலையில் மேய்ச்சலுக்குச் சென்று ஆடுகள் சாலைகளில் வாயில் நுரை தள்ள மயங்கிக் கீழே விழுந்துள்ளது. அப்பகுதிகளை சேர்ந்த ராமையன், ஜானகி, மகேந்திரன், பாஸ்கர், மருதமுத்து ஆகியோரின் 10 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்து உள்ளது.
மேலும் பாஸ்கர் என்பவரின் இரண்டு மாடுகள் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தது இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மாட்டிற்கு சந்திரசேகரபுரம் கால்நடை மருத்துவமனை உதவி கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பசுமாடுகள் உயிரிழந்து போனது ஆடு மற்றும் மாடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. விளைநிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்று மாடுகள் ஆடுகள் உயிரிழப்பதற்கு வாய்ப்பில்லை, அதிக நச்சுத்தன்மை கொண்ட மருந்தினை வயல் ஓரங்களில் இருந்திருக்கலாம் என்றும் அவற்றை மேயும் போது ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளது என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும், ஆடு மாடுகள் கால்நடைகள் உயிரிழப்பு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கால்நடையை மருத்துவர்கள் ஆடு மாடுகள் இறந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர் உயிரிழந்த ஆடு மற்றும் மாடுகளை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வலங்கைமான் வட்டாட்சியர் விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion