மாவட்ட ஆட்சியர் செயலால் மகிழ்ச்சி அடைந்த மயிலாடுதுறை மாவட்ட மக்கள் - அப்படி என்ன நடந்தது..?
மயிலாடுதுறையில் ஒரு சொட்டு பாதாள சாக்கடை தண்ணீர் கூட சாலையில் வழிய கூடாது அவ்வாறு வழிந்தால் உங்களைத்தான் பிடிப்பேன் என நகராட்சி ஆணையரிடம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளின் செயல்பட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடு பல்வேறு பிரச்சனைகளை நாள்தோறும் மயிலாடுதுறை பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்க அரசிடம் அனுமதி கோரப்படுள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை கழிவு நீர் ஆள்நுழைவுத் தொட்டியின் வழியாக சாலைகளில் வழிந்து ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த சூழலில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மகாபாரதி மயிலாடுதுறையில் உள்ள பாதாள சாக்கடை மற்றும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். சுகாதார மற்றும் தூய்மை பணிகளில் அதிக கவனம் செலுத்தி வரும் ஆட்சியர், பொறுப்பேற்ற நாள் முதல் நகராட்சி பகுதிகளில் கொட்டி கிடக்கும் குப்பைகளை துரிதகதியில் அப்புறப்படுத்தி, தூய்மையாக பராமரிக்க அவர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
கமலா ஹாரிஸ் கணவருக்கு உதட்டில் முத்தமிட்ட அமெரிக்க அதிபரின் மனைவி... காரணம் என்ன? வைரல் வீடியோ..!
இன்று காலை நகராட்சி குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், கழிவுநீர் நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பாதாள சாக்கடை கழிவு நீர் ஒரு சொட்டு கூட சாலையில் வழிய கூடாது. அவ்வாறு வழிந்தால் நகராட்சி ஆணையரான நீங்கள் தான் பொறுப்பு என்று நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியிடம் அதிரடி காட்டினார். சாலைகளில் கழிவு நீர் வழிந்து ஓடாமல் தினந்தோறும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அப்போது மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.