Kamran Akmal: திடீரென தேசிய தேர்வுக் குழுவில் இடம்.. அதிரடியாக ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்...!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் எட்டு பேர் கொண்ட ஜூனியர் தேர்வுக் குழுவில் தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் எட்டு பேர் கொண்ட ஜூனியர் தேர்வுக் குழுவில் தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் நியமிக்கப்பட்டுள்ளார். சொஹைல் தன்வீர், அமீர் நசீர், தைமூர் கான், ஜுனைத் கான், பைசல் அதர், கெய்சர் அப்பாஸ் மற்றும் சனாவுல்லா பலோச் ஆகியோரை உள்ளடக்கிய தேர்வுக் குழுவின் தலைவராக பிசிபி அக்மலை நியமித்துள்ளது.
இதையடுத்து, 41 வயதான கம்ரன் அக்மல் தேசிய தேர்வுக் குழுவில் இடம் பெற்ற பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
Kamran Akmal Played one of the best Test innings #ONTHISDAY 29-01-2006 vs India @ National Stadium Karachi. Pak were 6/39 at one stage when he came into bat & @KamiAkmal23 Scored 113, that is one of the all time great Test innings In Modern era.pic.twitter.com/0EMmZrvguB
— Zohaib (Cricket King) 🏏 (@Zohaib1981) January 29, 2023
இதுகுறித்து கம்ரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ நான் பயிற்சி அளிப்பதை இப்போது ஒரு தொழிலாக எடுத்துக்கொண்டேன். எனவே, உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்தேன். நீங்கள் பயிற்சி அளிப்பவர்களாகவோ அல்லது தேசிய தேர்வாளராகவோ தேர்வு செய்யப்பட்டால், விளையாடுவதில் உங்களால் கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தேன்” என்றார்.
Good luck ,thank you ,thank you and lot of love Kami bhia
— AWAIS AHMAD GHUMAN (@awaisahmghuman) February 7, 2023
Kamran Akmal for you @KamiAkmal23 #KamranAkmal pic.twitter.com/oRxLZhxwmW
பாகிஸ்தான் அணிக்காக கம்ரன் அக்மல் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2648 ரன்களும், 157 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3236 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 987 ரன்கள் எடுத்துள்ளார்.
Former Pakistan wicketkeeper-batter Kamran Akmal has announced retirement from all forms of cricket to focus on his coaching career. pic.twitter.com/2Ifji1nopc
— Circle of Cricket (@circleofcricket) February 7, 2023
2002ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமான கம்ரன் அக்மல், கடந்த 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
ஹரூன் ரஷீத்:
முன்னதாக, பாகிஸ்தான் மூத்த அணியின் தலைமை தலைமை தேர்வாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரூன் ரஷீத்தை பிசிபி நியமித்தது. ரஷீத் 2015 முதல் 2016 வரையில் பாகிஸ்தான் தலைமை தேர்வாளராக இருந்துள்ளார்
முன்னதாக பாகிஸ்தான் தேசிய தரப்பின் இடைக்கால தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்ட ஷாஹித் அப்ரிடியிடம் இருந்து ரஷீத் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய தேர்வாளராக நியமிக்கப்பட்ட ரஷீத் 1977 முதல் 1983 வரை பாகிஸ்தான் அணியில் விளையாடியுள்ளார். இவர் 23 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.
வருகின்ற மாதம் நியூசிலாந்துக்கு அணி பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுஅன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.