மேலும் அறிய
Advertisement
நாகை அருகே வீட்டில் கோழியை பிடிக்க வந்த நல்ல பாம்பை - வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறை
ராஜேந்திரன் குடிசை வீட்டுக்கு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் புகுந்துள்ளது.
நாகை அருகே வீட்டில் கோழியை பிடிக்க வந்த 6 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகணேசன், மருமகள் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகே கருவேல முட்களும், மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இங்கு நல்லபாம்பு, சாரைப் பாம்பு, கருநாகம், மற்றும் நட்டுவாக்களி தேள் ஏராளமாக உள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது பாம்புகள் அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இப்பகுதியில் சுமார் 20 மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த நிலையில்இன்று அங்குள்ள மூங்கில் தோட்டத்தில் இருந்து ராஜேந்திரன் குடிசை வீட்டுக்கு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் புகுந்துள்ளது. கோழி அடைகாத்த முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு நகர முடியாமல் கோழி கூட்டுக்குள்ளையே தஞ்சமடைந்தது. அப்போது கோழி அதிக சத்தம் எழுப்பி கோழி கூண்டை சுத்தி சுத்தி வந்ததைக் கண்ட ராஜேந்திரனின் மருமகள் பிரியதர்ஷினி நல்ல பாம்பு படம் எடுத்து சீறுவதைக் கண்டு அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்து பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். தொடர்ந்து விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் கருவேல முள் காட்டினையும், மூங்கில்களை வெட்ட உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion