மேலும் அறிய

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு - அமைச்சரை வழி மறைத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்!

கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாய பாதிப்புகளை பார்வையிட வருமாறு அமைச்சரை வழிமறித்து விவசாயிகள் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது திருச்சி முக்கொம்பு வழியாக கல்லணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் தில் திறக்கப்பட்ட நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு -  அமைச்சரை வழி மறைத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்!

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்கள் வெள்ள நீரில் முழங்கியது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு  இந்த  கிராமங்களில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதி வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும், கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் செல்வதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ள நீரை கடந்து படகுகள் மூலமும் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு -  அமைச்சரை வழி மறைத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்!

மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 5 வது முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இக்கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கள் வீடு உடமைகளை விட்டு மக்கள் நிவாரணம் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு -  அமைச்சரை வழி மறைத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்!

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படுகை கிராமங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது அப்பகுதி மக்கள் கொள்ளிடம் ஆற்றில் உள்ள 2 மதகுகளில் உள்ள ஷட்டர் பழுதடைந்ததால் வெள்ள நீர் ஆற்றிற்கு வெளியே உள்ள விவசாய விளை நிலங்களில் பாய்ந்து 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அந்த மதகுகளை பார்வையிட்ட அமைச்சர் மெய்ய நாதன் உடனடியாக அந்த மதகுகளில் புதிய ஷட்டர்கள் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு -  அமைச்சரை வழி மறைத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்!

தொடர்ந்து காரில் சென்ற அமைச்சரை இருவேறு இடங்களில் இடை மறித்து நீரில் முழ்கிய விவசாய பாதிப்புகளை காண விவசாயிகள் அழைத்துச் சென்றனர்.  அப்போது அமைச்சரிடம் ஆதங்கம் தெரிவித்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாங்கள் இரண்டு முறை பயிரிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதம் ஆகி உள்ளது. இதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து இன்னலுக்கு ஆளாகியுள்ளோம் எனவும் இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆய்வுக்கு வந்த அமைச்சரின் காரை மறைத்து பாதிப்பு பகலுக்கு அழைத்துச் சென்று பார்வையிட செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget