மேலும் அறிய

Drug Abuse: சிறுவர்களை சீரழிக்கும் இந்த மாத்திரை; மருந்துச்சீட்டு இல்லாமல் கொடுக்காதீங்க: போலீசார் எச்சரிக்கை

இப்படி எல்லாம் போதை கிடைக்கும் என்று எப்படி இந்த சின்ன வயதிலேயே தெரிய வந்தது என்று அதிர்ச்சி அடைய வைக்கிறது போலீசார் கூறும் தகவல்கள்.

பலவகையிலும் போதை:

தஞ்சாவூரில் கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. குடித்துதான் ஆக வேண்டும் என்று போதைக்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு பொருட்களிலும் தங்கள் போதை தாகத்தை தணித்து கொண்டனர். உதாரணமாக கஞ்சா மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட மாத்திரைகள், சைக்கிள் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலிசன், இங்க் ரிமூவர் என்று பலவகையிலும் போதை ஏற்றிக் கொண்டனர்.

தமிழக அரசு மற்றும் போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் கஞ்சா மற்றும் பிற மாநில மது விற்பனை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது புதிய பிரச்னை ஒன்று முளைத்துள்ளது. அதுதான் நைட்ரோ மற்றும் டைட்டால் மாத்திரைகள். டாக்டரின் பரிந்துரையின்றி இதை சாப்பிடக்கூடாது. காரணம் டைடோல் மாத்திரை வலிக்கு உதவும் ஓபியாய்டு மருந்து என்று அறியப்படுகிறது. ஒபியாய்டு பொதுவாக போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. மிதமானது முதல் கடுமையான வலிக்கு நிவாரணம் அளிக்க மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை தங்களுக்கு பழக்கமான மருந்து கடைகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கிறக்கமான மனநிலையில் ஏற்படுகிறது.

தாக்குதலில் ஈடுபடும் இளைஞர்கள்:

அதனால் தங்களை பெரிய ரவுடி என்று மனதளவில் நினைத்துக்கொண்டு பல்வேறு தகராறுகளில் ஈடுபடுகின்றனர். இதுபோல்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை சிவகங்கை பூங்கா சாலையோர வியாபாரிகளை சில சிறுவர்கள் தாக்கினர். இவர்கள் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர். மேலும் திலகர் திடல் வாசலில் பானிபூரி கடை வைத்திருக்கும் வியாபாரி மற்றும் அருகில் பழக்கடை வைத்திருந்தவரை தாக்கி செல்போனை திருடிச் சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான பழ வியாபாரியான சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை சேவப்பநாயக்கன் வாரியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து செய்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் கஞ்சா மற்றும் நைட்ரோ, டைட்டால் ஆகிய மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு இதுபோன்று ரகளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டப்படி கடும் நடவடிக்கை :

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,  ”பழ வியாபாரி மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இல்லாமல் போதைக்காக நைட்ரோ மற்றும் டைடால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதுபோன்று டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை மருந்து கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த மாத்திரைகளை விற்பனை செய்யாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மீறி டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்துக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget