மேலும் அறிய

Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

விடாமுயற்சியோடு படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சான்றாக தூய்மை பணியாளரின் மகள் இருக்கிறார்

அப்பா தூய்மை பணியாளர்... மகள் நகராட்சி ஆணையர்... தொடர் முயற்சிக்குப் பிறகு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையரான துப்புரவு பணியாளரின் மகள்..அழகைபார்க்க அப்பா இல்லையே என்று மகள் வருத்தம்.Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மகள் துர்காவை அரசு உதவி பெறும் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்த சேகர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிக்க வைத்துள்ளார். பல்வேறு சிரமங்களுக்கிடையே கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டி மகளின் கல்வி தடைபட்டு விடாமல் துர்காவிற்கு ஊக்கம் கொடுத்து அவரை பட்டப் படிப்பு படிக்க வைத்துள்ளனர்.

சூரியவம்சம் திரைப்படம் மாதிரியான உண்மை கதை

இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015-ல் துர்காவை 21 வயதில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நிர்மல் குமார் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை லக்ஷிதா மூன்றாம் வகுப்பும் இரண்டாவது குழந்தை தீக்ஷிதா ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன் நிர்மல் குமார் துர்காவின்  அரசு வேலை கனவை அறிந்து அதற்கு உன்னை நீ தயார் செய்து கொள் என்று ஊக்கமளித்துள்ளார்.

தொடர் முயற்சியில் வெற்றி பெற்ற துர்கா

இதனையடுத்து துர்கா கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து மனம் தளராமல் 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு குரூப் 4 தேர்வுகளையும் அவர் எழுதி கட் ஆப் இல்லாத காரணத்தினால் தேர்ச்சி பெற முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது விடா முயற்சியின் காரணமாக மீண்டும் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார் அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 2024 ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30 க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று எஸ்பிசிஐடி ஆக பொறுப்பிற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

தந்தையின் அவமானத்தை வெகுமானம் ஆக்கிய மகள்

இருப்பினும் தனது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய போது பெற்ற அவமானங்கள் கஷ்டங்கள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த  துர்கா, நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி கடந்த ஜூன் மூன்றாம் தேதி அவருக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

அப்பா இறந்துவிட்டார்... கலங்கிய மகள்.. கண்ணீர் கதை

இது குறித்து துர்கா கூறுகையில் தனது அப்பா தூய்மை பணியாளராக பணி புரிந்து பல சிரமங்களுக்கு நடுவில் என்னை படிக்க வைத்தார். அதேபோன்று அம்மாவும் வீட்டு வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான் அரசினர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டேன். தொடர்ந்து குரூப் 2 குரூப் 1 குரூப் 4 என பல தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த நிலையில் விடாமுயற்சியுடன் படித்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது நகராட்சி ஆணையராக பதவி ஏற்க உள்ளேன். நகராட்சி அலுவலகத்தில்  அடித் தட்டில்  தூய்மை பணியாளராக வேலை பார்த்த எனது அப்பா நான் நகராட்சி ஆணையராக வருவதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இப்போது எனது அப்பா உயிரோடு இல்லை. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய விபத்தில் அவர் இறந்துவிட்டார். இருந்தாலும் அப்பாவின் பெயர் என்றைக்கும் இருக்கும். கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும். எதுவாக இருந்தாலும் கல்விக்கு பின்னாடி தான். நான் எப்படி அடித்தட்டில் இருந்து எவ்வித குடும்ப பின்னணியும் இல்லாமல் இன்று ஒரு அதிகாரியாக எனது கல்வியால் உயர்ந்திருக்கிறேனோ அது போன்று எல்லோரும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக அரசு அதிகாரியாக ஆகலாம். அரசு ஊழியராகலாம் என்று நான் சொல்ல மாட்டேன். நான் நகராட்சி ஆணையராகி மிகச் சிறப்பாக பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

கல்வியே செல்வம் - சாதித்து காட்டிய மன்னையின் மகள்

அசுரன் படத்தில் தனுஷ் தனது மகன் கதாபாத்திரத்திடம் நம்மகிட்ட காடு இருந்தா புடுங்கிக்கிடுவானுங்க ரூவா இருந்தா எடுத்துகிடுவானுங்க ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்தா எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம். நீ அவனுங்கள எதிர்த்து ஜெயிக்கணும்னு நினைச்சியின்னா படி. நல்லா படிச்சு அதிகாரத்தில் போய் உட்காரு. ஆனா அதிகாரத்துக்கு வந்ததுக்கப்புறம் அவனுங்க நமக்கு பண்ணத நீ எவனுக்கும் பண்ணாம இரு என்று கூறும் வசனத்திற்கு ஏற்றார் போல் தனது தந்தை துப்புர பணியாளராக இருந்து பட்ட கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் நெத்தியடி கொடுக்கும் விதமாக அவரது மகள் நகராட்சி ஆணையராக தனது கல்வியின் மூலம் உயர்ந்துள்ளது என்பது கல்வி தன்னை நம்பும் எவரையும் கைவிட்டதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக  அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal PM Sushila Karki: நேபாளத்தில் அமைந்தது இடைக்கால அரசு; முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி, யார் அவர்.?
நேபாளத்தில் அமைந்தது இடைக்கால அரசு; முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி, யார் அவர்.?
TN Weather Update: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை மைய கணிப்பு என்ன.?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை மைய கணிப்பு என்ன.?
Ind vs Pak: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா? அரசு எடுத்த முடிவு என்ன.. இதோ முழு தகவல்
Ind vs Pak: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா? அரசு எடுத்த முடிவு என்ன.. இதோ முழு தகவல்
Seeman: விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்
Seeman: விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விதியை மீறினாரா ராகுல்? வெளிநாட்டு பயண சீக்ரெட்! பற்றவைத்த பாஜக
”EX IPS-னு போடுங்க போதும்” பாஜகவை ERASE செய்த அண்ணாமலை? டெல்லி மீட்டிங் TO அறிக்கை
Nainar Nagendran | நயினார் டெல்லி விசிட் அமித்ஷாவை சந்திக்க திட்டம் முடிவுக்கு வரும் KAS  விவகாரம்?
Sushila Karki : நேபாளின் அடுத்த பிரதமர்?ரேஸில் இந்திய மாணவி..யார் இந்த சுசீலா கார்கி!
பயந்து ஓடி பதுங்கிய அமைச்சர்! தவித்த மாற்றுத்திறனாளி மனைவி! இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal PM Sushila Karki: நேபாளத்தில் அமைந்தது இடைக்கால அரசு; முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி, யார் அவர்.?
நேபாளத்தில் அமைந்தது இடைக்கால அரசு; முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி, யார் அவர்.?
TN Weather Update: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை மைய கணிப்பு என்ன.?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை மைய கணிப்பு என்ன.?
Ind vs Pak: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா? அரசு எடுத்த முடிவு என்ன.. இதோ முழு தகவல்
Ind vs Pak: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா? அரசு எடுத்த முடிவு என்ன.. இதோ முழு தகவல்
Seeman: விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்
Seeman: விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்
RBI New Rule: கடன்ல செல்போன் வாங்கிட்டு EMI கட்டாம இருக்கறவங்களுக்கு ஆப்பு வருது - ரிசர்வ் வங்கி திட்டம்
கடன்ல செல்போன் வாங்கிட்டு EMI கட்டாம இருக்கறவங்களுக்கு ஆப்பு வருது - ரிசர்வ் வங்கி திட்டம்
Nepal Issue: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்.? நீடிக்கும் இழுபறி - யாரை கை காட்டுகிறது ஜென் Z.?
நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்.? நீடிக்கும் இழுபறி - யாரை கை காட்டுகிறது ஜென் Z.?
TVK Vijay: ”உங்க விஜய் நா வரேன்
TVK Vijay: ”உங்க விஜய் நா வரேன்" திருச்சியில் மக்கள் சந்திப்பு.. நேரம் குறித்த விஜய்
Rubio on India: “உலகத்துலயே இந்தியா தான் எங்களுக்கு டாப்“; அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் என்ன சொல்றார் பாருங்க
“உலகத்துலயே இந்தியா தான் எங்களுக்கு டாப்“; அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் என்ன சொல்றார் பாருங்க
Embed widget