மேலும் அறிய

பாரதியாரின் இறப்பு தேதி வரலாற்று பிழை - பாரதி ஆய்வாளர் வைத்த கோரிக்கை..

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11-க்கு பதிலாக செப்டம்பர் 12-இல் அனுசரிக்கப்பட வேண்டும் என பாரதி ஆய்வாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என மயிலாடுதுறை சேர்ந்த தமிழ் பேராசிரியர் கால் நுற்றாண்டு காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். 

பாரதியாரின் இறப்பு தேதி வரலாற்று பிழை - பாரதி ஆய்வாளர் வைத்த கோரிக்கை..

தனது இறுதி காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாரதியார் தனது 39- ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11- ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் இறந்துள்ளார். அதனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பது அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால் செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிட்டு அவரது உறவினர்கள் சரியான முறையில் அவரது இறப்பை பதிவு செய்துள்ளனர். 

பாரதியாரின் இறப்பு தேதி வரலாற்று பிழை - பாரதி ஆய்வாளர் வைத்த கோரிக்கை..

ஆனால் அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சுவழக்கிலும் பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்து விட்டது. ஆனால் சென்னை மாநகராட்சியில் உள்ள பதிவேடு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிடுகிறது. இதுகுறித்து பாரதி ஆய்வாளரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான முனைவர் சுப்புரத்தினம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 12-ஆம் தேதி என அதிகாரபூர்வமாக மாற்ற வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

பாரதியாரின் இறப்பு தேதி வரலாற்று பிழை - பாரதி ஆய்வாளர் வைத்த கோரிக்கை..

மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மயிலாடுதுறையில் 3 மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா - தொடர்ந்து பள்ளிகள் இயங்க அனுமதி...!

இவரது முயற்சியின் பயனாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்ல மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டில் பாரதியார் இறந்தநாள் செப்டம்பர் 12 என 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அரசிதழிலும், அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பர் 12 என அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளால் செப்டம்பர் 11-ஆம் தேதியே பாரதியாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் நாள்காட்டிகளிலும், பாடக்குறிப்புகளிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முரண்பாடு அதிகாரப்பூர்வமாக களையப்பட வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!

”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!

TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’

ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 

”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!

Embed widget