மேலும் அறிய

கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

சீர்காழி அருகே நடுகடலில் மூழ்கிய படகை மூன்று தினங்களுக்கு பின்னர் மீட்டு மீனவர்கள் கரை சேர்த்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவ கிராம். இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் பழையார் சுற்றியுள்ள ஏராளமான மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2 ம் தேதி சேதுராமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதி, ஹரிஷ், நகுலன்,  முத்தையா, ராஜதுரை உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

அப்போது இவர்கள் பழையார் துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டிகல் மையில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் திடீரென பலத்த சூறைக்காற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நிலைகுலைந்த விசைப்படகு உடைந்து, தண்ணீர் உள்ளே புக தொடங்கி மெல்ல நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரைக்கால் மீனவர்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். 


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

இந்த சூழலில் பழையார் துறைமுகத்தில் இருந்து நான்கு நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்த போது படகில் உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் மூழ்கிய சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள விசை படகை, பழையாறை சேர்ந்த சக மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து,  நடுக்கடலில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட படகில் சென்று கடலில் மூழ்கிய விசைபடகை கட்டி இழுத்து வந்து கரை சேர்ந்தனர்.


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

அதனைத் தொடர்ந்து கரையிலிருந்து மேலே எடுக்க பொக்லையன் இயந்திரம் மூலம் படகை கயிறு கட்டி கரை ஏற்றினர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன் பிடிக்க செல்லும் எங்களுக்கு தற்போது போதிய மீன் கிடைக்காததாலும், அவ்வாறு கிடைக்கும் குறைந்த அளவிலான மீன்களையும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வியாபாரிகள் வந்து வாங்கிச் இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதுபோன்ற சமயங்களில் மேலும் எங்களுக்கு பேரிடியாக இயற்கை சீற்றத்தால் படகுகள் கவிழ்ந்து, நீரில் மூழ்வதும் தொடர் கதையாக இருந்துவருகிறது. மழை புயல் வெள்ளம் என இயற்கை சீற்றங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை அரசு கவனத்தில் கொண்டு இதுபோன்று ஏற்படும் இழப்புகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget