மேலும் அறிய

தஞ்சாவூர்: மராட்டிய மன்னர் காலத்து தூக்குமேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு..!

தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை உள்ளது. தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்ட இந்த தூக்குமேடை தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடங்களோடு எஞ்சியுள்ளது. இந்நிலையில் சிலர் இதை இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்க போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் திரண்டு கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

தஞ்சாவூரில் மராட்டிய மன்னர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்குமேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொல்லியல் துறையில் ஆய்வு செய்து பராமரிக்க வலியுறுத்தியும் வருகின்றனர். தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்குமேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தூக்குமேடையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
 
தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை உள்ளது. தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்ட இந்த தூக்குமேடை தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடங்களோடு எஞ்சியுள்ளது. இந்நிலையில் சிலர் இதை இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்கப் போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் திரண்டு கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகோயில் மீட்புக்குழு பொருளாளர் ராசேந்திரன் மற்றும் தூக்குமேடை அமைந்துள்ள வீட்டின் அருகே வசிக்கும் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர்  கூறியதாவது: மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இந்த தூக்குமேடையை பயன்படுத்தியுள்ளனர்.
 
காலப்போக்கில் தூக்குமேடை பயன்படுத்தாமல் இருந்ததால் தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த தூக்குமேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சிலர் இதனை எங்களுக்குரியது எனக்கூறி இடித்து அகற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதனை எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மேலும், இந்த இடத்தினை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் 

தஞ்சாவூர்: மராட்டிய மன்னர் காலத்து தூக்குமேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு..!
தஞ்சாவூர் மாவட்டத்தை மராட்டிய மன்னர்கள் ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. குறிப்பாக இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில் இதேபோன்று பல்வேறு தொன்மைவாய்ந்த சிற்பங்கள் இன்றும் தமிழ்நாடு அரசால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மராட்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ள தூக்கு மேடையை பாதுகாக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பழமை வாய்ந்த கட்டிடம் மட்டும் தொன்மை மாறாமல் உள்ள சின்னங்களை பாதுகாத்து வரும் வகையில் இதுபோன்ற கட்டிடங்களையும் அழியாமல் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என்றனர்.
 
தலைப்பு செய்திகள்

சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Embed widget