மேலும் அறிய

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 3,517 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

''விக்கிரவாண்டியில் இருந்து சுமார் 5 மணி நேர பயண நேரத்தை புதிய நான்கு வழி பைபாஸ் சாலை வழியாக சென்றால் 3 மணி நேரத்தில் செல்லலாம்''

தஞ்சை-கும்பகோணம்-விக்ரவாண்டி வரை சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஒரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. இதனால் கும்பகோணம் தஞ்சை 50 கிலோ மீட்டர் துாரம் செல்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும் நிலையானது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ்,நான்கு வழிச்சாலையாக கடந்த 2006 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து 2010ஆம் ஆண்டில் திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி  தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு,  விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு 3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது. பின்னர் கடந்த 2018 ஏப்ரல் மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சாலை பணி மூன்று பகுதிகளாக பிரித்து  தொடங்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 3,517 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம் விக்ரவாண்டி  சேத்தியாத்தோப்பு வரை முதல் கட்டமாகவும், சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் வரை இரண்டாம் கட்டமாகவும், சோழபுரத்திலிருந்து தஞ்சை வரை மூன்று கட்டமாக பணிகளை ஒதுக்கியது. இதில் முதல் கட்டமாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இதில் கேடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் மேல் 26 ஆற்றுப்பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ரயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச்சாலைகளும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

இரண்டாம் பகுதியான சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை 1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர்  சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும், 100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழகத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும்,  ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன. மூன்றாம் பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன் கோயில் புளியம்தோப்பு வரை 1,345 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நிளத்தில் அமைக்கப்படுகிறது. இதில் கும்பகோணத்தில் உள்ள காவிரி  ஆறு, வடவாறு ஆகிய ஆறுகள் உள்பட 62 இடங்களில் ஆற்றுப்பாலங்களும், தாராசுரம் பகுதியில் ஒரு ரயில்வே மேம்பாலமும், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருகாவூர் ஆகிய பகுதிகள் உள்பட 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

சுமார் 150 அடி அகலத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தற்போது சுமார் 180 அடிக்கு  அகலமாக மண் சாலைகள் அமைக்கும் பணிகள் தாராசுரம், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் ரயில்வே பாலமும், வளையப்பேட்டை, அசூர் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இச்சாலைக்காக பல்வேறு இடங்களில் சாலைகளில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை  இணைக்கும் பணியும்,  ஆற்றுப்பகுதிகளில் பாலங்கள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 3,517 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

சாலை பணி தொடங்கும்  போது, 2020 ஆண்டு இறுதிக்குள் முடிந்து 2021 ஆண்டு முதல் வாகன பயன்பாட்டிற்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் முடிக்கப்பாடமல் உள்ளது. எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தஞ்சாவூர்- விக்கரவாண்டி 4 வழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், விக்கிரவாண்டியில் இருந்து சுமார் 5 மணி நேர பயண நேரத்தை புதிய நான்கு வழி பைபாஸ் சாலை வழியாக சென்றால் 3 மணி நேரத்தில் செல்லலாம். இந்த சாலையில் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடி மற்றும் சூலமங்கலம் அருகிலுள்ள வேம்புகுடி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளன. மேலும் தஞ்சையிலிருந்து கும்பகோணம் தற்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. புதிய பைபாஸ் சாலையில் சென்றால் சுமார் 40 நிமிடங்களுக்குள் செல்லலாம் என்றார்.தஞ்சாவூர் விக்ரவாண்டி இடையே உள்ள மொத்த தூரம் 165 கி.மீ.

இந்த நான்கு வழி சாலை அமைக்கும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர  5 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழி சாலைகளும், 3 இடங்களில் சுங்கச் சாவடிகலும் அமைக்கப்படுகின்றன. தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலை பணிகள் அனைத்தும் ஜூலை 2022க்குள் முடித்து, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்பதால், சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன  என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget