Tamil Diaspora: கொரோனாவால் வெளிநாட்டு வேலையிழந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க சிறப்பு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டு வேலை இழந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
![Tamil Diaspora: கொரோனாவால் வெளிநாட்டு வேலையிழந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க சிறப்பு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? Thanjavur Tamil Diaspora Unemployed Due to Covid 19 Pandemic Special Scheme to Create Job Opportunities Know How to Apply TNN Tamil Diaspora: கொரோனாவால் வெளிநாட்டு வேலையிழந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க சிறப்பு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/02/8c1478775049eba66a57cbefe5e847d61685687336381733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டு வேலை இழந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு “புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்” என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி புரிந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்றுப் பயன் பெறலாம். அவர்கள் கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலினால் 01. 01.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது- பொதுப் பிரிவினர் வயது 18 க்கு மேலாகவும் 45 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். (பெண்கள் , SC,ST, BC, MBC, Minorities, Transgender and Differently Abled - வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்).
வணிகம் மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிக பட்ச திட்ட மதிப்பீடு ரூ. 5 இலட்சமாகவும் உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 இலட்சமாகவும் இருக்கும். பயனாளர் தம் பங்களிப்பாக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு கடன் திட்டத் தொகையில் 25 சதவீதம் அதிக பட்சம் ரூ.2.5 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிக்கட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
எனவே, வெளிநாடுகளிலிருந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் வாழ்வாதாரத்துக்கான குறுந்தொழில் துவங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/registration.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் www.msmeonline.tn.gov.in/megp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மையம், உழவர் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரடியாகவோ, 04362-255318, 257345 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)