மேலும் அறிய
Advertisement
தஞ்சை மாவட்டத்தில் அதிகாலை முதல் கனமழை... பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை பொழிவு விவரம்:
கல்லணையில் 5. 8 மில்லி மீட்டரும், திருக்காட்டுப்பள்ளியில் 10. 2 மில்லி மீட்டர், திருவையாறில் 16 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 16. 8 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 23 மில்லிமீட்டர், கும்பகோணத்தில் 23மில்லி மீட்டரும், பூதலூரில் 9. 8 மில்லி மீட்டரும், வல்லத்தில் 11 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 14. 2 மில்லி மீட்டர், ஈச்சன்விடுதியில் 4. 6 மில்லி மீட்டரும், பேராவூரணியில் 15 மில்லி மீட்டரும், அயன்குடியில் 8. 4 மில்லி மீட்டரும், நாகுடியில் 6. 2 மில்லி மீட்டரும், ஒரத்தநாட்டில் 11. 2 மில்லி மீட்டரும், மதுக்கூரில் 15 மில்லி மீட்டரும் , பட்டுக்கோட்டையில் 23. 5 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 19. 6 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்து வரும் நிலையில கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கொள்ளிடத்தில் மட்டும் 15, 003 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுபோல மேட்டூர் அணை நீர்மட்டம்ட 120 அடியாக உள்ளது. அணைக்கு 15 ஆயிரத்து 996 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 15, 003 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சம்பா, தாளடி இளம் நாற்றுக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது என்று விவசாயிசய் வேதனையுடன் தெரிவித்தனர். முன்கூட்டியே பயிரிடப்பட்ட ஒரு போக சம்பா பயிர்களுக்கு இந்த மழை உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion