தஞ்சை மாவட்டத்தில் பவர் கட்... உங்க ஏரியா இருக்கா பார்த்துக்கோங்க
Thanjavur Power Shutdown: வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்தில் வரும் 4ம் தேதி (வெள்ளி கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வரும் 4ம் தேதி மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே அறிவிக்கப்படும். இந்த பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும்.
வழக்கமாக காலை 9 மணி/10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது, பல்வேறு டிரான்ஸ்பார்மகளை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அந்தவகையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்தில் வரும் 4ம் தேதி (வெள்ளி கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் இருந்து மின்விநியோகம் பெறும் புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, பூதலுர், மருதக்குடி, செல்லப்பன்பேட்டை, முத்துவீரகண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்துர் பூதராயநல்லுர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம் மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, சித்திரக்குடி ஆற்காடு, ஆகிய கிராமங்களுக்கு அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.





















