மேலும் அறிய

அருமையான தொழில்நுட்பம்... சைப்பன்கள்: அப்படின்னா என்னவென்று தெரியுங்களா?

இத்தனை ஆண்டுகள் பல மழை, வெள்ள நேரத்திலும் இந்த சைப்பன்கள் எனப்படும் கீழ்குமிழிகள் வலுவாக இருந்துள்ளது வியப்பிலும் வியப்புதானே.

தஞ்சாவூர்: காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே 100- க்கும் மேற்பட்ட இடங்களில் "சைப்பன்கள்" அமைக்கப்பட்டது என்று தெரியுங்களா?

சைப்பன்கள் என்றால் என்ன தெரியுங்களா? பாசன ஆறும், காட்டாறும் ஒன்றன் மேல் ஒன்று செல்லும் வகையில் கட்டப்பட்ட அமைப்புதான். இவற்றை ஆங்கிலேயர்கள் கீழ்குமிழி என்று அழைத்தனர். இதில் முக்கியம் வாய்ந்த சைப்பன் தஞ்சை மாவட்டம் கண்டிதம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட அதே கால கட்டமான 1928-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கல்லணைக் கால்வாய் என்று அழைக்கப்படும் புது ஆறு வெட்டப்பட்டது.

இது இயற்கையான ஆறு கிடையாது. விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக செயற்கையாக வெட்டப்பட்ட பாசன ஆறு ஆகும். இந்த பாசன ஆறு வெட்டப்படும்போது மழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் செல்ல வடிகால்களும் முறையாக செப்பனிடப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே 100- க்கும் மேற்பட்ட இடங்களில் "சைப்பன்கள்" அமைக்கப்பட்டது.

இதில் பாசன ஆறு மேல்பகுதியிலும், காட்டாறு வாய்க்கால்கள் அதன் அடிபகுதியிலும் செல்லும். என்ன ஒரு தொழில்நுட்பம். இது அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் காட்டாறு மேல்பகுதியிலும், பாசன ஆறு அதன் கீழ் பகுதியிலும் செல்லும் வகையில் அடப்பன்பள்ளம், கண்டிதம்பட்டு, ஈச்சன்விடுதி உள்ளிட்ட நான்கு இடங்களில் சைப்பன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் "கீழ்குமிழி" என அழைத்து அதனை ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் மிகவும் முக்கிய இடம் பிடிப்பது தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் உள்ள கீழ்குமிழி. இங்கு மேல்பகுதியில் வல்லம்வாரி எனப்படும் காட்டாறு செல்கிறது. வல்லம் பகுதியில் பெய்யும் மழைநீர் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து இதன் வழியாக 29 கி.மீட்டர் தூரம் பயணித்து வடுவூர் அருகே கண்ணனாற்றில் சேருகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்குமிழி என்றழைக்கப்படும் இடத்தில் 8 கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் கன அடிநீர் வந்தாலும் அப்படியே உள்வாங்கி சுமார் 100 அடி தூரத்துக்கு உள்பகுதியில் பாய்ந்து பின்னர் வெளியேறும் வகையில் இந்த கட்டுமானம் செங்கல் - சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வியக்க வைக்கும் கட்டுமானத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தற்போதும் வியந்து பாராட்டி வருகின்றனர். மிகவும் துல்லியமான கட்டமைப்பு இது என்றும் தெரிவிக்கின்றனர். இந்த கட்டுமானம் அப்படியே பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.  

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பொறியாளர் எல்லீஸ் என்பவரால்தான் இந்த கல்லணைக்கால்வாய் ஆறு வெட்டப்பட்டது. அற்புதமான பாசன திட்டம் இது. இதில் கண்டிதம்பட்டு கீழ்குமிழியில் வல்லம் வாரி மேல்பகுதியில் எவ்வித இடையூறும் இல்லாமல் மழைக்காலத்தில் தண்ணீர் ஓடும். பாசனநீர் கல்லணைக் கால்வாயில் ஓடும். இதுவரை அந்த இடத்தில் ஒரு கசிவு கூட வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைநோக்கு பார்வையுடன் வலுவான கட்டமைப்புடன் இது கட்டப்பட்டுள்ளது. 87 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கீழ்குமிழி சீரமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகள் பல மழை, வெள்ள நேரத்திலும் இந்த சைப்பன்கள் எனப்படும் கீழ்குமிழிகள் வலுவாக இருந்துள்ளது வியப்பிலும் வியப்புதானே.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget