மேலும் அறிய

கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் குறித்து தஞ்சையில் நடந்த கருத்தரங்கு

தஞ்சாவூரில் கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஐயுசிஎன் அமைப்பை சேர்ந்த 7 பேர் கடல் தாழைகள் வளர்க்கும் முறைகளை தெரிந்து கொள்ளவும், கடல் பசுக்கள் பாதுகாப்பில் மற்றும் சூழல் சுற்றுலாவில் தாய்லாந்து நாட்டில் மேற்கொண்டுவரும் திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளவும் நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

கடல் தழைகள் வளர்ப்பு பணிகள்

அவர்களுக்கு தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் மாவட்ட வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் தழைகள் வளர்ப்பு பணிகள் குறித்த நேரடி செயல் முறை விளக்கம் மூங்கில் சட்டகங்கள், தென்னங்கயிறு பயன்படுத்தி கடல் தாழைகள் வளர்க்கும் முறைகளை அவர்கள் அடைக்காதேவன் கடற்கரை கிராமத்தில் நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டனர்.

கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் குறித்து தஞ்சையில் நடந்த கருத்தரங்கு

தஞ்சை மாவட்டத்தில் கடல் நீருக்கடியில் உள்ள கடல் தாழைகள் நர்சரி பற்றி விளக்கக்காட்சிகள் மூலம் அவர்களுக்கு ஓம்கார் பௌண்டஷன் நிறுவனத்தில் காண்பிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சாரக அதிகாரி, சேதுபாவச்சத்திரம் காவல்துறை ஆய்வாளர், காவல்துறை சிறப்புபிரிவு அதிகாரி தஞ்சாவூர், வனவர்கள், கடலோர காவல்துறை தலைமைக் காவலர், வனக் காவலர்கள், மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை மேற்பார்வையாளர், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் கடல்பசுக்களை உயிருடன் மீட்டு கடலில் விடுவித்த மீனவர்கள் கடல்தாழைகள் வளர்ப்பு பணிகளில் ஈடுபட்ட 17 மீனவர்களுடன் கலந்துரையாடி கடல்தாழை பாதுகாப்பு முயற்சிகள் அதில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியங்கள் குறித்த அனுபவங்களை பெற்றனர்.

கடல் பசு பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி

தொடர்ந்து அகில உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பு தாய்லாந்து மற்றும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் வெளிவயல் கிராமத்தில் உள்ள ஓம்கார் பௌண்டஷன் நிறுவனம் இணைந்து கடல் பசு பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியை தஞ்சாவூரில் நடத்தின. இந்நிகழ்ச்சியின் நோக்கம் பாக் ஜல சந்தி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கடல் பசு பாதுகாப்பு கடல் தாழை வளர்ப்பு முறைகள் பற்றி கற்றுக்கொள்வதும் ஆகும். இந்த முறைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தாய்லாந்தின் பிரதிநிதிகள் அவற்றைப் தங்கள் நாட்டின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக மாற்றியமைக்க முடியும்.

தஞ்சாவூர் உதவி வன பாதுகாவலர் சாந்தவர்மன் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சங்கர், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசோக்குமார்,  அன்பரசன்,  ரமேஷ், குமரன், இளங்கோவன், பாலகுமாரன் பிச்சை, பட்டுக்கோட்டை வனச்சரகர்  சந்திரசேகரன், பட்டுக்கோட்டை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் ஆய்வாளர் பிரியதர்ஷினி,  ஒருங்கிணைப்பாளர்  முத்துகுமார், தமிழ்நாடு காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரி  கார்த்திகேயன், தஞ்சாவூர் மீன்வளத்துறை அலுவலர் அனந்தன், ஓம்கார் பௌண்டஷன் இயக்குநர் பாலாஜி, தாய்லாந்தை சேர்ந்த அடிரேக், சிந்தா, சாடன்டோல், டிபுசா,  தீரா யுட்,  சான்டீ, சங் சூரி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

கடல்தாழை பாதுகாப்பு முக்கியத்துவம்

இந்த நிகழ்ச்சி கடல்தாழை பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. உதவி வன பாதுகாவலர் சாந்தவர்மன் கடல்பசு பாதுகாபிற்காக பாக் ஜல சந்தி பகுதியில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவைக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

கடல்பசு பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள்

தாய்லாந்து பிரதினிதி அடிரேக் கடல்பசு பாதுகாப்பிற்காக தாய்லாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் சூழல் சுற்றுலா மேம்பாடு குறித்து விளக்கமளித்தார். ஓம்கார் பௌண்டஷன் இயக்குநர் பாலாஜி கடல் பசு பாதுகாப்பு வனத்துறை மூலம் மீனவர்கள் வலையில் மாட்டிய கடல்பசுக்களை மீட்டு கடலில் விடப்பட்டது. அவர்களை ஊக்கபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஓம்கார் பௌண்டஷன் மேற்கொண்ட கடல் தாழை வளர்ப்பு பணிகள் கடல்தாழைகள் ஆராய்ச்சி செய்யும் முறைகள் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

தாய்லாந்து – இந்தியா இடையே அறிவு பகிர்வு

ஒட்டுமொத்தமாக, இந்த பரிமாற்றத் திட்டம் தாய்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே அறிவு பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான  ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது. ஒன்றாக வேலை செய்வதன் மூலம், இந்த இரு நாடுகளும் கடல் புல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதிலும், ஆபத்தான கடல் இனமான கடல் பசுக்களை  பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் நிகழ்ச்சியின் இறுதியாக பரதநாட்டிய கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Honor 200 Lite 5G: அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
Embed widget