மேலும் அறிய

விதை நெல் அரசு டெப்போக்களில் கிடைக்கலை... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்திய விவசாயிகள்

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் அரசு டெப்போக்களில் கிடைப்பதில்லை. தனியார் வியாபாரிகளிடமே விதை நெல் வாங்குகின்றனர்.

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் அரசு டெப்போக்களில் கிடைப்பதில்லை. தனியார் வியாபாரிகளிடமே விதை நெல் வாங்குகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிக் கூட்டம் நடந்தது.  இதற்கு தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். . இதில்  விவசாயிகள் கலந்துகொண்டு  கோட்டாட்சியரிடம் மனு அளித்து பேசியதாவது:

நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை

விவசாயி ஜீவக்குமார்: காவிரி, வெண்ணாறு ஆகியவற்றின் கிளை வாய்க்கால்களின் கடைமடைக்கு கூட இதுவரை தண்ணீர் போகவில்லை. செப்டம்பர் மாதம் இந்த நிலை நீடிப்பது விவசாயத்திற்கு அச்சம் தருகிறது. நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் அரசு டெப்போக்களில் கிடைப்பதில்லை. தனியார் வியாபாரிகளிடமே விதை நெல் வாங்குகின்றனர். இதேபோல் குறுவை அறுவடை நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் திறக்கப்படவில்லை. தனியாரிடமே நெல் விற்பனை செய்யும் நிலைமை நீடிக்கிறது. கல்லணை கால்வாயில் கடந்த ஐந்து நாட்களில் எட்டு பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மாடுகளும் ஆற்றில் போய்விட்டன. இந்தக் கூட்டத்திற்கு பதில் சொல்ல தகுதி உள்ள அதிகாரிகள் வருவதில்லை. கீழ்நிலை ஊழியர்களையே அனுப்புகின்றனர். அடுத்த கூட்டத்தில் இந்த நிலை நீடித்தால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

சர்க்கரை ஆலை அரவை பருவத்தை டிசம்பரில் தொடங்கணும்

கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை அரவைப்பருவத்தை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை வாயிலாக 1989ம் ஆண்டு ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் காட்டுவாரியில் கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டன. இவை தற்போது தூர்ந்து போய் உள்ளது. மழைக்காலங்களில் காட்டுவாரியில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கசிவு நீர் குட்டைகளை உடன் தூர்வார வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும்.

மரவள்ளி கிழங்கு அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.. முன்பு வழங்கியது போல் ரூ.20 ஆயிரம் மானியத்தை வழங்க வேண்டும்.

விதை நெல் அரசு டெப்போக்களில் கிடைக்கலை... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்திய விவசாயிகள்

ஏகேஆர்.ரவிச்சந்திரன் :  தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சம்பா பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் கட்டிய தொகைகளை அபகரித்து வருகிறது. ஒன்றிய அரசு, தமிழக அரசு, விவசாயிகள் பங்களிப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.8000 பிரிமியம் தொகையாக காப்பீட்டு நிறுவனம் பெற்றுக் கொண்டு பயிர் இழப்பீடு இல்லை என கூறி சில கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவு இழப்பீடு தொகை வழங்கி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிய காப்பீட்டு இழப்பீட்டை பெற்று தர வேண்டும்.

விவசாயிகளுக்கு தமிழக அரசு வினியோகம் செய்யும் விதைநெல் தரமற்றதாகவும், கலப்பு விதைகளாகவும் இருப்பதால் மகசூல் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே அதிகளவு விதை நெல்லை விற்பனை செய்கின்றனர். 25 சதவீதம் மட்டுமே அரசு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கு விதைநெல் வந்து பின்பு அதன் முளைப்புத் திறன் மற்றும் குறைபாடுகளை சோதனை செய்த பின்னரே விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். செங்கிப்பட்டி அருகே கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்தும், தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்.  புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். இல்லாவிடில் அனைத்து விவசாய சங்கங்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்.

பாசன வசதி பெற நடவடிக்கை வேண்டும்

வீர ராஜேந்திரன்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் கிராம விவசாய நிலங்களுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்று நீர் பாசன வசதி இல்லை. இதுகுறித்து மனு வழங்கியிருந்தோம். வாய்க்கால்களில் நீர் வழங்க ஆவன செய்யப்படும் என நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை பாசன வசதி ஏற்படுத்தவில்லை. கடந்த 2023 ம் ஆண்டு கோனேரிராஜபுரம் தலை மதகு பகுதியில் 10.60 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைத்தனர்.

இருப்பினும் கோனேரிராஜபுரம் தலை மதகு பாசன வசதி முற்றிலும் இல்லை. தடுப்பணையின் உயரத்தை விட மதகின் தரை மட்டம் அதிகமாக உள்ளது எனவே நீர் பெற முடியவில்லை. இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதை கடலையை அரசே கொள்முதல் செய்யணும்

பழனியப்பன்: நவம்பர் மாதம் விவசாயிகள் கடலை சாகுபடி மேற்கொள்வார்கள். இதற்கான விதை கடலையை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். வெஸ்டர்ன் 42 குஜராத் ஜே எல் ரக விதைகளை விவசாயிகள் சாகுபடி செய்வர். இதை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதில் விவசாயிகள் விடுபட்டுள்ளனர். இதை ஆய்வு செய்து விடுபட்ட விவசாயிகளை சேர்க்க வேண்டும்.

தங்கவேல்: ஒரத்தநாடு வட்டம் கல்லணை கால்வாய் பகுதியில் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் 50 நாட்கள் ஆகியும் முறையாக வரவில்லை இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. வாரம் ஒரு முறை தண்ணீர் திறந்து விடப்படுவதால் நாற்று விட்ட பகுதிகளில் அதிக வெயிலால் நாற்றுக்கள் முற்றிலும் அழிந்துவிட்டது தண்ணீரை நம்பி விதைப்பு முறையில் சாகுபடி செய்த பயிர்கள் அழிந்துவிட்டன. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் முறை வைக்காமல் இம்மாதம் முழுவதும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget