மேலும் அறிய

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி தஞ்சையில் வரும் 9ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம்

பாலஸ்தீன, அரபு நாடுகள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசையும், ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி வருகிற நவம்பர் 9ஆம் தேதி தஞ்சையில் பேரணி.

தஞ்சாவூர்: பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 9ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தஞ்சையில் நடைபெற்ற அனைத்து கட்சி இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சையில் செயல்படும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆப்தின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இஸ்ரேல் அரசு, அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி,தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை கொன்று குவித்து வருகிறது.

பாலஸ்தீனத்தை காசா நகரத்தை தரைமட்டமாக்கியும், அவர்கள் குடிக்க தண்ணீரும் ,உணவும், மருத்துவம் இன்றி பாலஸ்தீனர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆதரவாக செயல்பட்ட லெபனான்,ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீதும் கடுமையான போரை  தொடுத்து வருகிறது. அரபு நாடுகளின்  எண்ணெய் வளத்தை முழுமையாக அபகரிக்க இஸ்ரேல் அமெரிக்க வல்லரசுகள் சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக, வர்த்தகத்திற்கு ஏதுவாக புதிய கால்வாயை உருவாக்கவும், எண்ணெய்கிணறுகள் தோண்டுவதற்கும் தொலைநோக்கு திட்டத்துடன் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருவது கண்டனத்திற்குரியது.

பாலஸ்தீன, அரபு நாடுகள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசையும், ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி வருகிற நவம்பர் 9ஆம் தேதி தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.  நடைபெற இருக்கும் பேரணி, பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனநாயக,முற்போக்கு இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட  அனைவருக்கும் அழைப்பு விடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்  சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குரன், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல்லா, தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, இந்திய பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அருணாச்சலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ஆலம்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் எஸ்.அபுசாலி, எம்.இப்ராஹிம் ஷா, எம்.சுப்புராயன், ஏ.ஜோசப்சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget