மதர் தெரசா பவுண்டேசனின் புதிய பாதை தன்னம்பிக்கையூட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதர் தெரசா பவுண்டேஷன் 2002 ஆம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளில் 18 லட்சம் பயனாளர்களுக்கும் மேல் ஜாதி மதம் இனம் மொழி கடந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மதர் தெரசா ஃபவுண்டேஷன், துபாய் பிளாக் துலிப் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
புனித அன்னை தெரசாவின் அன்பு வழியை பின்பற்றி தஞ்சாவூர் மாதர் தெரசா பவுண்டேஷன் 2002 ஆம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளில் 18 லட்சம் பயனாளர்களுக்கும் மேல் ஜாதி மதம் இனம் மொழி கடந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதர் தெரசா கை பெண்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பல்வேறு சிரமங்களால் பாதிக்கப்பட்ட கைம்பெண்களுக்கு வாழ்வாதாரம் உயர்வதற்கு தேவையான பல்வேறு நல திட்டப்பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் மதர் தெரசா ஃபவுண்டேஷனும் துபாய் பிளாக் துலிப் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு துபாய் குடும்பத்தின் சேர்மன் முகமது எஹியா தலைமை வகித்தார் வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் அருள் சூசை முன்னிலை வகித்தார் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஜான் சக்கரியாஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
மதர் தெரசா பவுண்டேஷன் சார்பாக சிறப்பு விருந்தினர்கள் பிளாக் குடும்பத்தின் சேர்மன் முகமது எஹியா, வீரக்குறிச்சி மேக்ஸ் 6 பவுண்டேஷன் நிறுவனர் அருள் சூசை ஆகியோர் மதர் தெரசா கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்த 31 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகையும், ஒரு மாணவிக்கு மடிக்கணினியையும், சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக 11 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினர்.
இதில் சிறப்பு விருத்தினராக திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொது செயலாளர் எழுத்தாளர். இரா. உமா கலந்து கொண்டு தனது சிறப்புரையில் "புதிய பாதை" என்ற தலைப்பில் கைம்பெண்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை தன்னம்பிக்கையுடன் போராடுவதன் மூலம் சகமனிதர்களைப் போல் வாழ முடியும் என்று ஆணித்தரமாக விளக்கினார். தமிழ்நாடு கைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் உறுப்பினர் டாக்டர் ரேணுகா ஆலிவர், கைம்பெண்கள் நலவாரியத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள், அரசு திட்டங்கள், சலுகைகள், தேவையான அரசு சான்றிதழ்கள் பெறும் முறையையும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை ஆரோன், பிஷப் தேவதாஸ் ஆம்புரோஸ், வித்யாலயா பள்ளி தாளாளர் வின்சென்ட், நிர்வாகி கஸ்மீர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கௌரவ விருந்தினர்களாக தொழிலதிபர் பந்தல் R. சிவா, தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் பாலசுந்தரம், தஞ்சாவூர் எஸ்.வி. அசோசியேட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் விஜய் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து அனைவரையும் வரவேற்று பவுண்டேசனின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். பவுண்டேசன் அறங்காவலர்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், டாக்டர் ராதாபாய், முரளிகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அறங்காவலர் சம்பத் ராகவன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். துபாய் பிளாக் துலிப் குழுமத்தின் சார்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து கைம்பெண்களுக்கும் சிறப்பு விருந்தும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மதர் தெரசா பவுண்டேசன் நிர்வாக மேலாளர் மெர்சி, திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர் நாகராணி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டியா, அபிராமி, வர்ஷினி, ஷாமினா ஆகியோர் செய்திருந்தனர்.