லேட்டஸ்ட் கண்ணா... செம லேட்டஸ்ட்: வந்திடுச்சு தஞ்சைக்கும் வந்திடுச்சு “மொய் டெக்”
யார் எவ்வளவு மொய் பணம் கொடுத்தார்கள் என்பதை இதற்காக உறவினர் ஒருவர் உட்கார்ந்து நோட்டில் பதிவு செய்வார். அந்த மொய் நோட் பாதுகாப்பாக வைக்கப்படும். இப்படி ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.
தஞ்சாவூர்: லேட்டஸ்ட் கண்ணா... இது செம லேட்டஸ்ட் என்று தஞ்சையில் நடந்த தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் “மொய் டெக்” வந்த அனைவரையும் ஆச்சரியமும், வியப்பையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் இன்று தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இந்த மண்டபத்தை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார். மிகவும் சிறப்பாக நடந்த இந்த மண்டப திறப்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் என்ன தெரியுங்களா? அதுதான் மொய் டெக்.
காதுகுத்து, திருமணம், பூப்புநீராட்டுதல் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்று இடம் பெறுவது மொய் வைத்தல்தான். விழா நடத்துபவருக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் மொய் பணம் வைப்பது வழக்கம். யார் எவ்வளவு மொய் பணம் கொடுத்தார்கள் என்பதை இதற்காக உறவினர் ஒருவர் உட்கார்ந்து நோட்டில் பதிவு செய்வார். அந்த மொய் நோட் பாதுகாப்பாக வைக்கப்படும். இப்படி ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.
இது புதுசா இருக்கே! மொய் எழுதுனா உடனே ரசீது! #thanjavur #tamilnews pic.twitter.com/5QgPrbmR4C
— ABP Nadu (@abpnadu) December 4, 2024
இப்படி தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்கள் எவ்வளவு மொய் வைத்தார்கள். நாம் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு செய்யவேண்டியது என்பதை அந்த நோட்டை பார்த்து செய்வது வழக்கமான ஒன்று. அட இதெல்லாம் அப்போங்க... இப்போ காலம் எம்புட்டு மாறிடுச்சு. டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்திடுச்சு என்று அசால்ட்டு காண்பிக்கும் காலமாக மாறிவிட்டது.
அப்படிதான் தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் திருமண மண்டப திறப்பு விழாவிற்கு மொய் எழுத வந்தவர்கள் என்னப்பா, நோட்டை காணோம், பக்கத்துலேயே பாத்திரம் இருக்கும். எதுவுமே இல்லையே என்று தேட... அட இங்க பாருங்க என்று வாசலிலேயே வரிசையாக கம்ப்யூட்டர்களுடன் அமர்ந்திருந்தவர்கள் அழைக்க... என்னவென்று விசாரித்தவர்களுக்கு வியப்போ வியப்பு.
மொய்தானே எழுதணும் என்று அந்த டெக் வாலிபர்கள் கேட்க ஆமாங்க என்றவர்களிடம் இருந்து மொய் பணம் வாங்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அடுத்த செகண்டே பில் போல் கொடுக்க அசந்தே போய்விட்டனர். என்னப்பா இது என்று கேட்டவர்களுக்கு இதுதாங்க மொய் டெக் என்றார்களே பார்க்கலாம். கூட்டமா சுற்றி நின்று பெயர் எழுதுங்க... பெயர் எழுதுங்க என்று சொல்லிக்கிட்டே இருக்க வேண்டாம். மொய் கவரை கொடுத்தீங்களா, அடுத்த செகண்டே பில் உங்க கையில இருக்கும் என்று கூறி அசத்தினர்.
எப்படி எல்லாம் டெக்னாலஜி வளர்ந்திடுச்சு. முன்னாடி சாப்பாடு வேணும்னா ஓட்டலுக்கு போவோம். இப்போ செல்லுல ஆப்பை தட்டினா வீடு தேடி வருது சாப்பாடு. விசேஷத்துக்கு டிரஸ் எடுக்கணும்னாலும் அலைய வேண்டியதில்லை. அப்படி காலம் மாறிக்கிட்டு இருக்கு. அப்படியே இப்ப மொய் டெக் கலக்குது. இதனால மொய் எழுதிட்டு பேர் எழுதினாங்களா, இல்லையா என்று சந்தேகமேபட வேணாம். கையிலேயே ரசீதை கொடுத்துடறாங்க.. நிமிஷ நேரத்துல அசத்துறாங்க. எல்லாம் டெக்னாலஜி டெலவப்மெண்ட். செம லேட்டஸ்ட்டா மாறிக்கிட்டு இருக்கு. இன்னும் என்ன டெக்னாலஜி எல்லாம் வரப்போகுதோ என்று மொய் எழுதியவர்கள் வியப்போடு பேசி சென்றனர்.