வரும் 25ம் தேதிதான் கடைசி நாள்... தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு எதற்காக?
போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பிரிவிலும் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000 மும், இரண்டாம் பரிசாக ரூ.2000 மும், மூன்றாம் பரிசாக ரூ.1000மும் அவரவர் வங்கிக் கணக்குகளில் பரிசுத் தொகை வழங்கப்படும்.
தஞ்சாவூர்: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. பள்ளி அளவில், கல்லூரி அளவில், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளி மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
பள்ளி அளவில் வயது வரம்பு
பள்ளி அளவில் வயது வரம்பு 12-19 ற்குள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும். தடகள பிரிவில் மாணவர்களுக்கு 100 மீ, 200மீ, 400மீ, 800மீ, 3000 மீ, 110 மீ ஹர்டல்ஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் (2 கி.கி) மற்றும் குண்டு எறிதல் (6 கி.கி) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. பெண்களுக்கு 100 மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500 மீ, 100 மீ ஹர்டல்ஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் (1 கி.கி) மற்றும் குண்டு எறிதல் (4 கி.கி) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.
கல்லூரி அளவில் வயது வரம்பு
கல்லூரி அளவில் வயது வரம்பு 17-25 ற்குள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும். தடகள பிரிவில் மாணவர்களுக்கு 100 மீ, 200மீ, 400மீ, 800மீ, 3000 மீ, 110 மீ ஹர்டல்ஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் (2 கி.கி) மற்றும் குண்டு எறிதல் (7.26 கி.கி) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. பெண்களுக்கு 100 மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500 மீ, 100 மீ ஹர்டல்ஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் (1 கி.கி) மற்றும் குண்டு எறிதல் (4 கி.கி) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.
இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம் தொடு போட்டி, மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், வாலிபால், ஹேண்ட்பால், கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர், மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்படவுள்ளது. மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், டென்னிஸ் (ஒற்றையர் (ம) இரட்டையர்), பளுதூக்குதல், பென்சிங், ஜூடோ (ம) குத்துச் சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும்.
மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகள்
மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பு கிடையாது. கைகால் ஊனமுற்றோர் தடகள பிரிவில் 100மீ மற்றும் குண்டு எறிதல், இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், சக்கர நாற்காலி மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும்.
கண்பார்வையற்றோர் தடகள பிரிவில் 100மீ மற்றும் குண்டு எறிதல், அடாப்டட் வாலிபால் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும். 3. மனநலம் பாதிக்கப்பட்டோர் - தடகள பிரிவில் 100மீ மற்றும் குண்டு எறிதல் மற்றும் எறிபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும். காதுகேளாதோர் தடகள பிரிவில் 100மீ மற்றும் குண்டு எறிதல் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும். பொதுப்பிரிவினர் (வயது வரம்பு - 15-35 ற்குள் மாவட்ட அளவில் மட்டும்) தடகள பிரிவில் 100மீ, 3000 மீ, (பெண்களுக்கு 1500மீ) குண்டு எறிதல் 7.26 கி.கி. (பெண்களுக்கு 4 கி.கி) மற்றும் நீளம் தாண்டுதல், இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், கிரிக்கெட், கபடி, வாலிபால், கால்பந்து, கேரம் மற்றும் சிலம்பம் தொடு போட்டி ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கு போட்டிகள்
அரசு ஊழியர்களுக்கு தடகள பிரிவில் 100மீ, 3000 மீ, (பெண்களுக்கு 1500மீ) குண்டு எறிதல் 7.26 கி.கி.(பெண்களுக்கு 4 கி.கி) மற்றும் நீளம் தாண்டுதல், இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், செஸ், கபடி, வாலிபால் மற்றும் கேரம் ஆகிய போட்டிகள் தற்போது பணிபுரியும் அரசு ஊழியர்களான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படும். மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் - கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், டென்னிஸ் (ஒற்றையர் (ம) இரட்டையர்), பளுதூக்குதல், பென்சிங், ஜூடோ (ம) குத்துச் சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும். மாநில அளவில் மட்டும் டிராக் சைக்கிளிங் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பிரிவிலும் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000 மும், இரண்டாம் பரிசாக ரூ.2000 மும், மூன்றாம் பரிசாக ரூ.1000மும் அவரவர் வங்கிக் கணக்குகளில் பரிசுத் தொகை வழங்கப்படும். ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப்பிரிவில் ஒருவர் இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், இப்போட்டிகளில் பங்கு கொள்வதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 25ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணையதளத்தில் விண்ணப்பிக்காமல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04362-235 633 என்ற எண்ணிலும், 7401703496 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.