தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பங்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! முகாம் எப்போது? விவரங்கள் இதோ!
இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களி பங்கு மாறுதல் முகாம்கள் நடக்க உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் பங்கு மாறுதல் முகாம்கள் ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் நடக்க உள்ளது.
தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களி பங்கு மாறுதல் முகாம்கள் நடக்க உள்ளது.
இது குறித்து சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இந்த சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில் பங்கு மாறுதல் மற்றும் விலாசம் மாறுதல் சம்பந்தமாக சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் பங்கு மாறுதல் முகாம்கள் நடக்க உள்ளது.
அதன்படி ஒரத்தநாடு கோட்ட அலுவலகத்தில் வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கும், 3ம் தேதி மருங்குளம் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கும், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கூட்ட அரங்கத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கும், தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தில் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கும், கந்தர்வக்கோட்டை கோட்ட அலுவலகத்தில் வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கும், திருவையாறு கோட்ட அலுவலகத்தில் வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு முகாம்கள் நடக்கிறது.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு ஒரத்தநாடு கரும்பு அலுவலர் புண்ணியமூர்த்தியை 9025775390 என்ற எண்ணிலும், மருங்குளம் கரும்பு அலுவலர் ஜெயராமனை 9025775356, சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் மற்றும் கந்தர்வகோட்டை கோட்டத்திற்கு துரைராஜ் 9025775355, காசிராஜாவை 8754045710, தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பங்குதாரர்கள் கரும்பு அலுவலர் ஜெயராமனை 9025775356 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
பங்குதாரர்கள் தங்களின் பங்கு மாறுதல் மற்றும் விலாசம் மாறுதல் சம்பந்தமாக கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பங்குதாரர் இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ், பங்குதாரர் உயிருடன் இருப்பின் சம்மத கடிதம், வாரிசு சான்றிதழ், இதர வாரிசுதாரர்கள் சம்மத கடிதம், பங்கு சான்று தொலைந்து இருப்பின் வக்கீலிடம் பிரமாண பத்திரம் பெற்று வர வேண்டும்.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மேற்கண்ட நாட்களில் சம்பந்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.





















