மேலும் அறிய

Thanjavur: சோழர்களின் பண்பாட்டை விளக்கும் கரந்தை செப்பேடு

மற்றவர்களை மண்டியிட வைக்கும் வீரமும், மற்றவர் நலனுக்காக மண்டியிடத் தயங்காத நற்குணமும் சோழர்களின் பண்பாடு இதை உயர்த்தி காட்டி நிற்கிறது கரந்தைச் செப்பேடு.

தஞ்சாவூர்: மற்றவர்களை மண்டியிட வைக்கும் வீரமும், மற்றவர் நலனுக்காக மண்டியிடத் தயங்காத நற்குணமும் சோழர்களின் பண்பாடு இதை உயர்த்தி காட்டி நிற்கிறது கரந்தைச் செப்பேடு. சரிங்க செப்பேடு என்னங்க செப்பேடு பற்றி தெரிந்து கொண்டு கரந்தை செப்பேடு பற்றி பார்ப்போம்.

செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவழி (பரம்பரை) , போர்க்குறிப்புகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் பல செப்பேடுகளில் திருமாலின் அவதாரமாகக் காட்டப்படும் இராஜேந்திர சோழன், வைணவ அந்தணர்களுக்கு, திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில், ஒரு பெரும்  கிராமத்தையே, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகத் தானமாக தந்ததைக் குறிப்பிடுகிறது கரந்தைச் செப்பேடு. 

கிபி 1020ல் எழுதப்பட்ட இச்செப்பேடு, 57 இதழ்களைக் கொண்டது. இதழ்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு, இராஜேந்திர சோழனின் அரச முத்திரையோடு உள்ளது. அதில் ஒரு புலி, தனது இரு கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்திருக்கிறது. அதனுடைய வால், முன்னங்கால் வரை உயர்ந்துள்ளது. இது புலியின் வீரத்தையும், கோபத்தையும் இணைத்தே காட்டுகிறது.

பல சோழ அதிகாரிகளால் அலசப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, தானமளித்த நிலங்கள் அளக்கப்பட்டு, உரியவரிடம் தானநிலம் ஒப்படைக்கப்பட்டபின், செப்பேட்டில் எழுதப்பட்டது.  வெறும் 173 நாளில், அரசனின் வாய்மொழி ஆணை முறையாக நிறைவேற்றப்பட்டு, பதியப்பட்டிருக்கிறது. இது அந்த நிர்வாகத்தின் வேகத்தையும், ஆற்றலையும், திறமையையும் காட்டுகிறது. எதிரிகளுக்கு எமன், களத்தில் தயவுதாட்சண்யமே காட்டாதவன், தவறுகளுக்கு தண்டனையைத் தவிர வேறு எதையுமே பரிசாகத் தராதவன் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இராஜேந்திர சோழனின் மற்றொரு பக்கத்தை, கரந்தைச் செப்பேட்டின் சில வரிகள் கூறும்போது மனம் நெகிழ்ந்து தான் போகிறது.

பெரும்பற்றப்புலியூர் மாளிகையில் இராஜேந்திர சோழர் அமர்ந்திருக்கும் போது அமைச்சர் ஜனநாதன் என்பவர் 1080 அந்தணர்களுக்கு வேண்டி, நிலதானம் தருமாறு கோரிக்கை விடுக்க, அவரின் வேண்டுகோளினை ஏற்று, 57 கிராமங்களை ஒன்றிணைத்து, தன் தாயான திரிபுவனமாதேவியின் பெயரில் தானமாக வழங்குகிறார். அப்போது ஒரு வேண்டுகோளும் வைக்கிறார். 

தென்கிழக்காசிய நாடுகளை எல்லாம் வென்ற மாவீரன். கடல்கடந்து வெளிநாடுகளை வென்ற முதல் வீரன் ராஜேந்திர சோழன்.. அப்படி என்னவ வேண்டுகோளை வைத்தார் தெரியுங்களா. 

"இராஜேந்திர சோழனாகிய நான், உலகம் என்ற ஏரியில் விளையாடும் அன்னப்பறவை போன்றவன். தைரியம், அறிவு, அன்பு, செல்வம், இரக்கம் போன்றவை என்னிடம் அதிகம் உள்ளன. புலவர்கள் என்னிடம் விவாதிக்கும்போது, அவர்களின் வார்த்தைகளில் உள்ள உண்மைகளுக்கு மதிப்பளிப்பவன். இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் சொல்லப்படும் தத்துவங்கள் முழுதும் அறிந்தவன்.

அத்தகைய ராஜேந்திரன் ஆகிய நான், எதிர்காலத்தில் அரசனாக வருகின்றவர்களிடம் எனது தலைதாழ்த்தி, வணங்கி, யாசித்து வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் தருகின்ற இக்கொடையை தயவுசெய்து காப்பாற்றுங்கள்.”ஏழை அந்தணர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் அளித்த நிலக்கொடை எக்காலத்திலும் காப்பாற்றப்பட்டு, தொடரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஒரு மாபெரும் பேரரசன், அடுத்து வரப்போகும் அரசர்களின் காலில் விழுந்து யாசித்து கோரிக்கை வைக்கிறார். 

இதை உத்தரவாகவே இடலாம் என்ற நிலையிலும் அவ்வாறு செய்யாமல் வேண்டுகோளாக கோரிக்கையாக வைக்கும் ராஜேந்திர சோழனின் மாண்பு நெகிழ வைக்கிறது அல்லவா. இதைத்தான் தெளிவுபடுத்தி இருக்கிறது கரந்தைச் செப்பேட்டு வரிகள். பேரரசனாக இருந்தாலும், மனித வாழ்வு நிலையில்லாதது என்பதை உணர்ந்திருக்கிறான். கொடுத்த தானமும், அதனால் பயனடைந்தவர்களின் வாழ்வும் நிலைத்து நீடூழி நிற்கவேண்டும் என்பதற்காக, தனது நிலையை தாழ்த்தி யாசிக்கிறான்.

பெயரை சொன்னாலே மற்றவர்கள் நடுநடுங்க வைக்கும் வீரம் கொண்ட பேரரசன் மற்றவர் நலனுக்காக மண்டியிடத் தயங்காத நற்குணம் கொண்டு சிறந்து விளங்கியதை விளக்குகிறது கரந்தை செப்பேடு. இதுதானே சோழர்களின் பண்பாடு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman on Tax : Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget