மனைவியின் பிரிவை தாங்க முடியாத கணவர்; 4 மணி நேரத்தில் பிரிந்த உயிர் - தஞ்சையில் சோகம்
மனதால் ஒருவரைக் கட்டியணைப்பது தான் காதல். அன்பால் அரவணைப்பதே காதல். எண்ணங்கள் ஒன்றிணைந்து இதயங்கள் பரிமாறுவதே காதல்.
தஞ்சாவூர்: மனைவியின் பிரிவை தாங்க முடியாத முதியவரும் மரணமடைந்த சம்பவம் தஞ்சை பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும் மாறாமல் இருப்பது ஆழமான அன்பாகும். எல்லா கணவன்-மனைவிக்குமே தாங்கள் `மேட் ஃபார் ஈச் அதர்' ஆக இருக்க வேண்டும். தங்கள் ஒற்றுமையை மற்றவர்கள் பாராட்ட வேண்டும்; தங்களுடைய தாம்பத்தியம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதை செயல்படுத்தபவர்கள்தான் வாழ்வில் மனமொத்த தம்பதிகளாக வாழ்கின்றனர்.
வாழ்க்கையில் எல்லாச் செயல்களும் இயற்கையும், அறிவும் இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கைக்கு ஏற்ற முறையில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசித்து திட்டமிட்டால் தான் இல்லறம் சிறக்கும். ஒழுக்க பழக்கங்கள், தொழிலறிவு, இயற்கை பற்றிய தெளிவு, இவையனைத்தும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இருப்பது நல்லது. தனி மனிதன் தன் கடமைகளை உலகுக்குச் செய்ய இல்லறம் என்ற நல்லறம் மூலம் தான் முடியும். ஒருவர்க்கொருவர் மனமொத்து உதவும் ஒரு நட்பு வாழ்க்கைக்குத் தேவை. இருவரின் மனம் ஒத்த, மதிப்புணர்ந்த வாழ்க்கை வாழ இறை வழிபாடு, அறநெறி இரண்டும் வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர் நாடு கருக்காடிபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி (92). இவரது மனைவி வள்ளியம்மை ஆச்சி (85). இவர் நேற்று காலை 8 மணியளவில் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத கணவர் ராமசாமி அடுத்த நான்கு நேரத்தில் காலமானார். இருவரும் இணைபிரியாது, மனமொத்து, ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் மனைவியின் பிரிவைத் தாளாத கணவரும் மரணம் அடைந்தது அந்த பகுதியில் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் கருக்காடிப்பட்டி கிராமத்தில் இருவரது உடலும் ஒன்றாக தகனம் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் காதல் என்பது மனங்களின் அரவணைப்பு. ஒருவர் மனதை இன்னொருவர் அன்பால் அரவணைப்பது. ஒத்த சிந்தனையால் அரவணைப்பது. உள்ளூர ஆதரித்து அரவணைப்பதுதான் காதல். இதற்கு இலக்கணமோ, எல்லையோ கிடையாது.. இது எல்லையில்லா ஏகாந்தப் பெருவெளி.. எப்படி வானத்தை நம்மால் எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாதோ.
அது போலத்தான் காதலும். இதுதான் காதலின் உச்சம் என்று எதையுமே நம்மால் சொல்ல முடியாது. ஒரு சொல்லவியலாத அனுபவம். அனுபவித்துப் பார்த்தால்தான் காதலின் உன்னதம் புரியும், தெரியும். மனதால் ஒருவரைக் கட்டியணைப்பது தான் காதல். அன்பால் அரவணைப்பதே காதல். எண்ணங்கள் ஒன்றிணைந்து இதயங்கள் பரிமாறுவதே காதல். காதலுக்கு மொழி தேவையில்லை கண்களால் காதலை வெளிப்படுத்தலாம்.
ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் அன்பே காதல். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் இவள் அல்லது இவன் எனக்கு வாழ்க்கைத்துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று. ஏதோ ஒரு செயல் இருவருக்கும் ஒன்றாக இருக்கும். உன்னிடம் எனக்கு இந்த விஷயம் பிடித்திருக்கிறது என்று ஆரம்பிக்கும் காதல் நீ இல்லாமல் என் உயிர் இல்லை என்று ஒரு கட்டத்தில் சொல்ல வைக்கிறது. அதுபோல்தான் ராமசாமி – வள்ளியம்மை ஆச்சி வாழ்க்கையை காதலுடன் அரவணைத்து வாழ்ந்துள்ளனர்.