மேலும் அறிய

தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!

திமுக வேட்பாளர் சண். ராமநாதன் திறந்த ஜீப்பில் பள்ளி அக்ரஹாரம் நடுத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, பழைய கும்பகோணம் ரோடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார். செல்லும் இடமெல்லாம் அவரை பொதுமக்கள் உற்சாகத்துடன் அமோக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சை 1வது வார்டு பள்ளி அக்ரஹாரம் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வழிபட்ட திமுக வேட்பாளர் சண். ராமநாதன் தொடர்ந்து திறந்த ஜீப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளருடன் திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன், எம்.பி. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாநகர தலைவர் மகேந்திரன், கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் அவை தலைவர் ஜிம் கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!

திமுக வேட்பாளர் சண். ராமநாதன் திறந்த ஜீப்பில் பள்ளி அக்ரஹாரம் நடுத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, பழைய கும்பகோணம் ரோடு, ஹரி நகர், வெண்ணாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் புடை சூழ சென்ற வேட்பாளர் சண். ராமநாதனுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன்  பேசுகையில், தஞ்சை மாநகரப் பகுதிகளில் நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலத்திட்டங்களை பெருமளவில் நிறைவேற்றி உள்ளேன். முக்கியமாக அடிப்படை வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தினேன். தஞ்சையின் அனைத்து பகுதிகளில் சாலை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. மாநகர் முழுவதும் சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 ஆண்டுகள் குடிநீருக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டம் நன்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்னை சட்டமன்ற  உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இன்னும் தஞ்சை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

தஞ்சை மாநகராட்சியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. முக்கியமாக மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை செயல்படுத்தி உள்ளது. இதுபோன்று மேலும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் வாக்குறுதிகள் அளித்து பேசினார்.

தொடர்ந்து மாநகராட்சி 2, 3 வார்டுகளில் சண்.ராமநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்து பகுதியிலும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Embed widget