மேலும் அறிய

ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்

2026 - 2027ஆம் கல்வியாண்டில் ஆயுஷ் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு நடந்துவரும் நிலையில், இன்னும் சில நாட்களே அவகாசம் உள்ளன.

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு விரைவில் முடிவடைய உள்ளது.

ஆயுஷ் படிப்புகளுக்கு ஆன்லைனில் சேர்க்கை

2026-2027 ஆம் கல்வியாண்டிற்காக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள்) உரிய தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வரவேற்கப்படுகின்றன.

பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் /பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினை "www.tnayushselection.org" என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மெரிட் அடிப்படையில் சேர்க்கை

இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS) மற்றும் ஓமியோபதி (BHMS) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency - NTA) நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) [NEET (UG)] 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளின்படி, மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், கட்டண கட்டணம் மற்றும் பிற விவரங்கள். கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

முக்கிய விவரங்கள்

விண்ணப்பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/ JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

படிப்புப் பிரிவு : சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS). ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS).

படிப்பிற்கான காலம் : 5 1/2 ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித் தகுதி : 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி);

கல்லூரிகளின் விவரங்கள்:

அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள்-02, இருக்கைகள்-160,

அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி-01, இருக்கைகள்-60.

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-60.

அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-50.

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02-இருக்கைகள்-160,

சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள்-13, இருக்கைகள்-820,

சுயநிதி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்-05, இருக்கைகள்-270.

சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்-11-இருக்கைகள்-900.

சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-20-

இருக்கைகள்-1900.

சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும் ரூ.100/- கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி

அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர். தேர்வுக்குழு. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.

அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் - 31.07.2026 மாலை 5.00 மணி வரை

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் - 31.07.2026 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் /கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ தபால் கடைசி நாள் - 31.07.2026 மாலை 5.00 மணி வரை

பி.ஏ.எம்.எஸ். / பி.எஸ்.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ். / பி.எச்.எம்.எஸ். /பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget