மேலும் அறிய

சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி - தப்பியோடி தாழ்ப்பாள் போட்டதால் உயிர் தப்பியது

’’ஆத்திரமடங்காத ரூபன், கத்தியால், உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை உள்ள அறையின் கதவினை பலமாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார்கள். இந்த சம்பவத்தின் போது, அவர்களிடமிருந்து மூன்று கத்திகள் கீழே விழுந்தன’’

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை சுக்காம்பார் பாலத்தின் அருகில், ஒரு மோட்டார் சைக்கிளில்  4 பேர் சுமார் ஒன்றரை மணி நேரம்  அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், மர்மமான முறையில் நான்கு பேர் சுற்றி திரிந்து வருவதாக தோகூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தோகூர் போலீசார், அப்பகுதிக்கு வந்த போது, ஒரு பைக்கில் வந்த நான்கு பேரும் சென்று விட்டனர். பின்னர் புதுஆற்றுப்பாலம் அருகில் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளை மற்றும் எஸ்எஸ்ஐ வேல்முருகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் வாகன தனிக்கையில் இருப்பதையறிந்த அவர்கள், போலீசாரை ஏமாற்றும் விதமாக, ஒருவர் மட்டும் வாகனத்தை ஒட்டி வர மற்ற மூன்று பேரில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.


சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி - தப்பியோடி தாழ்ப்பாள் போட்டதால் உயிர் தப்பியது

சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து நான்கு விசாரனை செய்த போது அவர்கள் போதையில் இருப்பதும், திருவெறும்பூர்,  பெல்டவுன் சீப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28),  துவாக்குடி, அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன் (21), துவாக்குடி, அண்ணா வளைவு இந்திரா தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த  பாண்டியன் மகன் சாந்தகுமார் (21) என்பதும்  தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் லால்குடி அருகே உள்ள அரியூர் பகுதிக்குச் சென்று  வந்ததாகவும் கூறி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார், நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, வாகனத்தில் இருக்கும் பைகளை எடுத்து வர கூறி, அதில் உள்ள பொருட்களை பார்த்து கொண்டிருந்தார்.  பின்னர், அவர்களிடமிருந்த செல்போனை வாங்கி பார்த்து கொண்டிருந்த போது,  ரூபன், பையில் வைத்திருந்த பொருளை எடுத்து கொண்டு திடிரென நான்கு பேரும் தப்பி ஒடினர். அப்போது உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை, எஸ்எஸ்ஐ வேல்முருகன் மற்றும்  இரண்டு பெண் காவலர்கள் மட்டும் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை மற்றும் போலீசார், தப்பியோடும் நான்கு பேரை பிடிக்க முயன்ற போது, ரூபன், தான் வைத்திருந்த கூர்மையான கத்தி போல் உள்ள ஆயுதத்தால், உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளையை குத்த முயன்றார். இதனால் உயிருக்கு பயந்த உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை, காவல் நிலையத்திலுள்ள அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். பின்னர் பெண் போலீசார் காவல் நிலையத்திற்குள் சென்று மற்றொரு அறையின் கதவினை தாழிட்டு கொண்டு விட்டனர்.


சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி - தப்பியோடி தாழ்ப்பாள் போட்டதால் உயிர் தப்பியது

ஆனால் ஆத்திரமடங்காத ரூபன், கத்தியால், உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை உள்ள அறையின் கதவினை பலமாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார்கள். இந்த சம்பவத்தின் போது, அவர்களிடமிருந்து மூன்று கத்திகள் கீழே விழுந்தன. அதற்குள் சத்தம் கேட்டு, காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் கூடினர்.அப்போது, அனைவரும் சென்றிருப்பார்கள் என எண்ணத்தில், நரேஷ்ராஜீ, காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை  எடுக்க வந்த பொழுது கல்லணையில் உள்ள கிராம மக்கள் உதவியுடன் தோகூர் போலீசார் நரேஷ் ராஜுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த வண்டியில் இருந்து 3 ஆடு உரிக்கும் கத்தி போல் உள்ள வாள்களை பறிமுதல் செய்தனர்.


சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி - தப்பியோடி தாழ்ப்பாள் போட்டதால் உயிர் தப்பியது

தப்பியோடி மூன்று பேரும் இரும்பு ராடு மற்றும் வாலுடன் தப்பி சென்றுவிட்டனர். சம்மதப்பட்ட 4 பேரின் பெற்றோருக்கு தோகூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். நரேஷ்ராஜுவின்  பெற்றோர்,  வினித் தாய் தோகூர் காவல் நிலையம் வந்தனர்.  அவர்களிடமும் தோகூர் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் தோகூர் காவல்நிலைத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.  இதில் நரேஷ்ராஜூவை கைது செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.நான்கு பேரும் குத்த முயன்ற போது, உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை தப்பியோடி வராவிட்டால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடு திருடர்களால்  ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் தோகூர் போலீசாருக்கும் ஏற்பட்டிருக்கும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget