மேலும் அறிய

தஞ்சை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்

’’மாவட்ட ஆட்சியர் தனது செல்போன் எண்ணை கொடுத்து, ஏதேனும் தேவைப்பட்டால் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றார்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டிணம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட  கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான விஜயகுமார், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மதுக்கூர் பகுதியில் ஆய்வு செய்து விட்டு பட்டுக்கோட்டை திரும்பிக் கொண்டிருந்தனர்.

தஞ்சை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்

அப்போது, மதுக்கூர் மொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆய்வுக்கு வந்த அதிகாரிகளின் காரை  வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் மற்றும் எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் காரை விட்டு கீழறங்கினர். அப்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழைநீர் தேங்கியுள்ளது, குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள்,கர்ப்பிணி பெண்களுடன் அவதிப்பட்டு வருகின்றோம்.  தேங்கியுள்ள மழை நீரில், கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்த, அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என  தங்களை அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும்  பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். ஆனாலும் பொது மக்கள் நீங்கள் சொல்லி விட்டு சென்றவுடன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று பொது மக்கள் கூறவே, மாவட்ட ஆட்சியர் தனது செல்போன் எண்ணை கொடுத்து, ஏதேனும் தேவைப்பட்டால் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

தஞ்சை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்

பொதுமக்கள், எம்எல்ஏ, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மொச்சிக்குளம்  பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால், மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது. இதனால் குடியிருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள மழை நீரில் விஷ ஜந்துக்கள் இருப்பதால்,அதில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை கடித்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் மூன்று நாட்களாக மழை நீர் தேங்கி அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள், எங்களின் நிலையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் செய்தறியாமல் இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்ததையடுத்து, முற்றுகை செய்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று முடிவு செய்தோம். அதன் படி முற்றுகை செய்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நாங்கள் கலைந்து சென்றோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget