மேலும் அறிய

தஞ்சை: பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

’’தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, வாய்க்காலின்  தலைப்பு பகுதியில் மட்டும் கடமைக்காக துார் வாரிவிட்டு, வாய்க்கால் முழுவதும் துார் வாரப்பட்டது என கூறி விட்டார்கள்’’

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, சுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. சுவாமிமலையின் நடுவில் கோயில் இருந்தாலும், ஊரை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. சுவாமிமலை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணி நடைபெற்று வருகின்றது.  இங்குள்ளவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். சவாமிமலை பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு, பாபநாசம் தாலுக்கா கங்காதாரபுரம் கிராமத்திலுள்ள காவிரியாற்றிலிருந்து நாககுடி பாசன வாய்க்கால் பிரிந்து சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து, சுவாமிமலை மற்றும் நாககுடி கிராமத்திலுள்ள சுமார் 500 ஏக்கருக்கு பாசனத்திற்கு தண்ணீர் வருகின்றது. வாய்க்கால் வரும் தண்ணீரை கொண்டு ஒரு காலத்தில் முப்போகம் சாகுபடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை: பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், குறுவை முடிந்து தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நாககுடி பாசன வாய்க்காலை கடந்த இரண்டு வருடங்களாக துார் வாராததால், வாய்க்காலில் ஆகாயதாமரை, முட்டைசெடிகள், ஆலகொடிகள் படர்ந்து, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கடந்த வருடம்தான், துார் வாரப்பட்டது. இந்தாண்டு துார் வார முடியாது என்று பதில் அளிக்கின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வருவதால், வாய்க்கால் தண்ணீர், வயலுக்குள் பாய்ந்தால், அனைத்து பயிர்களும் அழுகி விடும் என்பதால், சுவாமிமலை விவசாய சங்கம் சார்பில் வாய்க்கால் பாசனத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், சொந்த பணத்தில், நாககுடி பாசன வாய்க்காலை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை: பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

இது குறித்து சுவாமிமலை விவசாய சங்கம் நிர்வாகி கல்யாணகுமார் கூறுகையில், நாககுடி பாசன வாய்க்கால் மூலம் சுவாமிமலை மற்றும் நாககுடி கிராமத்தில் உள்ள நிலங்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. இந்த வாய்க்கால் தண்ணீர் நம்பி தான் நெற்பயிர், கரும்பு, வாழை, எள்ளு, பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றோம்.  காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை நம்பி, சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் சுவாமிமலைக்கு வரும் நாககுடி பாசன வாய்க்காலை கடந்த இரண்டு வருடங்களாக துார் வாராததால், கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, வாய்க்காலின்  தலைப்பு பகுதியில் மட்டும் கடமைக்காக துார் வாரிவிட்டு, வாய்க்கால் முழுவதும் துார் வாரப்பட்டது என கூறி விட்டார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வருகின்றது. தண்ணீர் செல்ல வழியில்லாததால், தேங்கியுள்ளது. இதனால் பக்கத்தில் உள்ள வயல்களில், தண்ணீர் பாய்ந்தால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி விடும். மேலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், சுவாமிமலை பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரின் நிலை கேள்வி குறியானது.

தஞ்சை: பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டு கொள்ளாததால், சுவாமிமலை விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் அனைவரும் சொந்தமாக நிதி திரட்டி, பாசன வாய்க்காலை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், வாய்க்காலில், அருகிலுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் கலப்பதால், வாய்க்கால் தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. விவசாயிகள் விவசாயப்பணி செய்யமுடியாமல் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற நிலையால், சரும நோய்கள், டெங்கு, சிக்கன்குன்யா போன்ற பல்வேறு காய்ச்சல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், சுவாமிமலை பாசன வாய்க்காலை வருடந்தோறும் வாய்க்காலை துார்வார வேண்டும், வாய்க்காலில் கழிவு நீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget