மேலும் அறிய

தஞ்சையில் புதுமை பெண் திட்டம்....3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை..!

தஞ்சை மாவட்டத்தில்  புதுமைப் பெண் திட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில்  புதுமைப் பெண் திட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தொடக்கி வைத்தார். மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு நிதி உதவியை வழங்கி அதற்கான வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூரில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில், முதல்வரின் நிகழ்ச்சி காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தஞ்சையில் புதுமை பெண் திட்டம்....3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை..!

இதில் எம்.எல்.ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து முதற்கட்டமாக ப்ளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளில் பயிலும்   472 மாணவிகளுக்கு உடனடியாக, அந்த மாணவிகளின் வங்கி கணக்கு, அதற்கான ஏடிஎம் கார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் சிலர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்ட நடமாடும் ஏடிஎம் இயந்திரங்களில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் வந்துள்ளதா என சரிபார்த்தும், சில மாணவிகள் ரூ.1000 ரொக்கப்பணத்தையும் எடுத்தனர்.


தஞ்சையில் புதுமை பெண் திட்டம்....3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை..!

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் தற்போது 472 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவிகள் உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கி அதற்கான ஏடிஎம் கார்டு, உயர்கல்வி வேலை வாய்ப்பு மலர், விழிப்புணர்வு கையேடு ஆகியவையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மாணவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1000ம் நிதி சென்றுவிடும். இந்த நிதியைக் கொண்டு மாணவிகள் தங்களது உயர் கல்விக்கு தேவையான செலவை செய்து கொள்ளலாம் என்றார்.



தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget