மேலும் அறிய
Advertisement
எடுக்காத எல்ஐசி பாலிசிக்கு ரூ.5 லட்சம் முதிர்வு தொகை - அனுபவத்தை பகிர்ந்த தமிழ்நாடு மத்திய பல்கலை., துணைவேந்தர்
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் ஜப்பானில் இருக்கும் போது அங்கு உள்ள பேராசிரியர் என்னிடம் பயன்பாடு இல்லாமல் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்.
எடுக்காத எல்ஐசி பாலிசிக்கு ஐந்து லட்சம் முதிர்வு தொகை வந்துள்ளதாகவும் ஒடிபியை கூறும்படியும் எனக்கே அழைப்பு வந்தது என திருவாரூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெருகிவரும் சைபர் குற்றங்கள் என்கிற தலைப்பில் சைபர் குற்ற கருத்தரங்கம் விளமலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சைபர் குற்றத்திலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர் கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதில் பேசிய துணைவேந்தர் கிருஷ்ணன். “ ஒரு முறை நான் காரில் சென்று கொண்டிருந்த போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது.அதில் நீங்கள் ஒரு பேராசிரியர் தானே நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு எல்ஐஜி பாலிசி எடுத்திருக்கிறீர்கள்.அது தற்போது 5 லட்சமாக முதிர்வு அடைத்துள்ளது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை சொல்லுங்கள் என்று கூறினார்கள். எனக்கு நன்றாக தெரியும் நான் எல்ஐசி பாலிசி எதுவும் எடுக்கவில்லை.
நான் சற்று சுதாரித்துக் கொண்டு அதெல்லாம் வேண்டாம் என்று கூறினேன். சார் வரக்கூடிய ஐந்து லட்சத்தை ஏன் விடுகிறீர்கள் என்று கூறினார்கள். எனவே இது போன்று நம்மை ஏமாற்ற அவர்கள் அங்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர், “கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் ஜப்பானில் இருக்கும் போது அங்கு உள்ள பேராசிரியர் என்னிடம் பயன்பாடு இல்லாமல் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதுபோன்று அங்கு மதிய உணவு நேரமான ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை எவ்வளவு முக்கியமான கால் வந்தாலும் அவர்கள் எடுப்பதில்லை. அங்குள்ள மக்களுக்கு டெக்னாலஜியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில் அது போன்று இல்லை” என்று பேசினார்.
இந்த சைபர் குற்ற கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சைபர் குற்ற காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீபிரியா தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்டத்துறை சட்ட ஆய்வுகள் பள்ளி துணைத் தலைவர் பால சண்முகம் முதுகலை ஆராய்ச்சி அறிஞர் சமூகப் பணிகள் துறை சரண்யா சுந்தரராஜீ உள்ளிட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் சமூகநல அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion